3 வயது குழந்தை பலி! இறப்பில் சந்தேகத்தால் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 வயது குழந்தை பலி! இறப்பில் சந்தேகத்தால் விசாரணை

Added : ஆக 14, 2021
Share
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி பழங்குடியின கிராமத்தில், மூன்று வயது பெண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி பழங்குடியின கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த, மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சரோஜினி தங்களது, 3 வயது பெண் குழந்தைக்கு உடல்
 3 வயது குழந்தை பலி! இறப்பில் சந்தேகத்தால் விசாரணை

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி பழங்குடியின கிராமத்தில், மூன்று வயது பெண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி பழங்குடியின கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த, மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சரோஜினி தங்களது, 3 வயது பெண் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி, வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்ததால், இறப்பில் சந்தேகம் இருப்பதாக, டாக்டர்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் குழந்தையின், பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X