பொது செய்தி

தமிழ்நாடு

'ஜெய்ஹிந்த் வார்த்தையை நாம் பயன்படுத்துவோம்!'

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை-''நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை, நாம் எல்லாரும் பயன்படுத்த, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., - எம்.ஆர்.காந்தி பேசினார்.தமிழக சட்டசபையில், கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை சுட்டிக்காட்டி, பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி நேற்று

சென்னை-''நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை, நாம் எல்லாரும் பயன்படுத்த, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., - எம்.ஆர்.காந்தி பேசினார்.



latest tamil news


தமிழக சட்டசபையில், கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை சுட்டிக்காட்டி, பா.ஜ., - எம்.எல்.ஏ., காந்தி நேற்று சட்டசபையில் பேசியதாவது:வேளாண் பட்ஜெட்டில், முதல் முயற்சியாக வெற்றிகரமாக திட்டங்களை சொல்லி இருக்கிறீர்கள்.

தமிழகத்தின் வேளாண்மை முன்னேற்றம் அடைய வேண்டும்என்பதற்காக, இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நுாறு நாட்களை நிறைவு செய்துள்ள இந்த ஆட்சிக்கு வாழ்த்துகள். இன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை சொல்லாததற்காக, இந்த சட்டசபையில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.


latest tamil news


எனவே, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற நாம், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை எல்லாரும் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, 'நீங்களே பதிவு செய்து விட்டீர்கள்; நன்றி' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N SAKTHIVEL - COIMBATORE,இந்தியா
15-ஆக-202123:40:33 IST Report Abuse
N SAKTHIVEL நாங்கள் "வெல்க இந்தியா' என்றுதான் சொல்வோம்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-ஆக-202123:34:40 IST Report Abuse
elakkumanan அப்படி என்னதான் இந்த தமிழ் மொழியை வளத்தானுவளோ..............இங்கே தமிழ் தமிழ் ன்னு கூவும் ஒருத்தனோட பிள்ளையும் தமிழ் மீடியத்தில் படிக்காது...ஏன்னா, வயிறு முக்கியம்............இவ்ளோதான் டா தமிழ் வளர்ச்சி.....கொடுமை டா....அப்படி தமிழ் தமிழ் னு கூவுறவனுவோ, ஆங்கில மீடிய பள்ளிகளை மூடுங்கள்..வயிறு தடுக்குதுல்ல.....இப்பிடித்தானே டா அம்பது வருசமா , ஊரை ஏமாத்துறீங்க.............ஏதாவது ஒரு அறிவியல் புத்தகம் ( ஆராய்ச்சி செய்வது ,சும்மா, வள்ளுவரும் இளங்கோவடிகளும் எழுதுனத்தை மாற்றி எழுதி சம்பாரிக்கிறமாதிரி இல்லை....) எழுதியிருக்கோமா...எழுதுறவனை ஆதரிச்சிருப்போமா? எழுதக்கூடியவனை கண்டுபிடிச்சிருப்போமா? எப்படிடா மொழி வளரும்? சினிமா வுக்கு பெயர் வச்சா வளர்ப்பீங்க.........திராவிட அறிவு என்பது எவ்வளவு மொக்கை னு இதுலயாவது தெரிஞ்சுக்கோங்க.....ஆங்கிலம் படிப்பது, அந்த மொழியில் உள்ள ஆராய்ச்சி சம்பந்தமான புத்தகங்களுக்காக....அது இருந்தால்தான், எந்த மொழியும் வளரும்...சினிமாவுக்கு பெயர் வச்சு மொழி வளர்ப்பதெல்லாம் தானை தமிழ் குடி தலைவனின் அசாத்திய அறிவுக்கு மட்டுமே எட்டியது...........சினிமாவுக்கு தமிழில் பெயர் வச்சா தமிழ் வளரும்நா, இந்நேரம், தமிழ் மொழி நல்லா காடு மாதிரி வளர்ந்திருக்கணுமே.............யோசிங்கடா................கண்ணு இருந்தா பத்தாது....பாக்கணும்...பாக்கலேன்னா, இருந்தாலும் இல்லைனாலும் ஒண்ணுதான்....சும்மா, சாதி பேரை சொல்லி கத்துவதால், வருங்காலமும் இப்பிடியே ரேஷன் வரிசைதான்..கையை கடவுள் கொடுத்தது ஏந்துவதற்கு மட்டும்தான் ன்னு கண்டுபிடிச்சதுதான்டா திராவிட வளர்ச்சி.........பிச்சை தான்..அரசும் மக்களும்..........
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
15-ஆக-202123:23:42 IST Report Abuse
radha நாம் ( சங்கிகள்) எல்லாரும் பயன்படுத்த, முயற்சி செய்ய வேண்டும். யார் வேண்டாம்னு சொன்னா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X