உலக அளவில் இந்தியா வளர்ச்சி பெற திட்டம்: சுதந்திர தினத்தில் பிரதமர் சூளுரை

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (70)
Advertisement
புதுடில்லி: ‛‛உலக அளவில் வளர்ச்சிக்கான ஒரு பெரிய திட்டம் விரைவில் வரப்போகுது '', என டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.டில்லியில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை விவரம் வருமாறு:சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்வோம். தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். நாட்டு

புதுடில்லி: ‛‛உலக அளவில் வளர்ச்சிக்கான ஒரு பெரிய திட்டம் விரைவில் வரப்போகுது '', என டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.latest tamil news


டில்லியில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை விவரம் வருமாறு:

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்வோம். தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். நாட்டு பிரிவினை அனைவருக்கும் வேதனை தந்தது. கோவிட் ஒழிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவிப்போம். கோவிட் தடுப்பூசி நமது நாட்டில் தயாரிக்கப்பட்டதால் பலரும் இன்று பலன் அடைந்துள்ளனர். சப்கா ஷாத் சப்கா விகாஸ் என்ற முழக்கத்தின்படி நாட்டில் அனைவரது வளர்ச்சியே நமது இலக்கு. இதற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.


latest tamil newsசாலை வசதி, மின் இணைப்பு ,காஸ் இணைப்பு மூலம் பல கோடி பேர் நன்மை பெற்றுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி வங்கிக்கணக்கு என்பதும் நமது இலக்கு. அனைவருக்கும் சுகாதார வசதியை அளிப்பது அரசின் கடமை. ஏழை குடும்பத்தை சேர்ந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மருத்துவ வசதியை பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.


வலுவான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவும். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தி உள்ளோம். ஏழைகளுக்கு நல்ல சத்துள்ள தரமான அரிசி வழங்கி வருகிறோம். குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படுகின்றன. தகவல் தொடர்பால் அனைவரும் இணைக்கப்பட வேண்டும்.


latest tamil news


பின்தங்கிய 110 மாவட்டங்களில் வளர்ச்சிக்கென தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். கல்வி, சாலை வசதி, தகவல் தொடர்பு, வேலை வாய்ப்பு ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நமது நடவடிக்கையால் கிராமங்களில் டிஜிட்டல் தாக்கம் அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் கூட தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்வி கொள்கை அவசியம். பழம் பெருமைகளை நாம் மறக்கக்கூடாது.


latest tamil news


புரட்சிக்கும், புதுமைக்கும் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். காதி உற்பத்தியை பெருக்க வேண்டும். மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளோம். இது உலக அளவில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பதுடன் இந்தியாவை பெருமை பெற செய்யும்.


latest tamil news


2 ஆண்டுகளில் 4.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒபிசி பிரிவினரை மாநிலங்களே தீர்மானிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கூட்டுறவு இயக்கங்களின் வளர்ச்சிக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளோம். இந்தியாவில் விளையும் விளை பொருட்களை உலகம் முழுவதும் விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பிற நாடுகளுடன் நாம் போட்டி போட வேண்டுமானால் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.


நேருவுக்கு நாடு நன்றி கடன்பட்டுள்ளது


லோக்சபா மக்களவை மற்றும் தேர்தல் பிரசாரங்கள் என பல்வேறு சந்தேர்பங்களில் முன்னாள் பிரதமர் நேருவை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 2020ல் பார்லிமென்டில் பேசிய மோடி, பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்ததாக கூறினார். 1950ல் ஏற்படுத்தப்பட்ட நேரு - லியாகத் அலி ஒப்பந்தத்தையும் விமர்சித்தார்.

அதே போன்று 2019ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அச்சட்டப் பிரிவு நேரு செய்த பிழை என்று குறிப்பிட்டார்.
நேரு மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகும் நிலையிலும் அவரை விமர்சிப்பதை காங்கிரஸ் எதிர்த்து வந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இன்றைய சுதந்திர தின உரையில் நேருவை நினைவு கூர்ந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி, ராணி லட்சுமி பாய், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலருக்கு தனது உரையில் மரியாதை செலுத்திய மோடி, “இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இந்தியாவை ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேல், எதிர்காலத்திற்கு வழிகாட்டிய அம்பேத்கர் ஆகிய அனைவருக்கும் நாடு நன்றி கடன்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202123:16:18 IST Report Abuse
அப்புசாமி நல்லபடியா தாங்கக்கூடிய ட்டிருந்த நேருவின் ஆத்மாவை எழுப்பி உக்காரவெச்சு விமர்சிச்சீங்க. இப்போ திடீர்னு நேரு நல்லவராயிட்டாரு... இனிமேலாவது அவரை விமர்சிக்காமல் இருங்க. அன்னாரது ஆத்மா உறங்கட்டும். ஜெய் ஹிந்த்..
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
15-ஆக-202122:04:26 IST Report Abuse
Raj வாயிலே தினமும் வடை சுடுங்கோஜி.
Rate this:
Cancel
15-ஆக-202122:00:34 IST Report Abuse
அப்புசாமி என்னது? உலகத்துக்கே ஆளுக்கு பாஞ்சி லட்சம் குடுக்குற திட்டமா இருக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X