தமிழ்நாடு

தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்: வரவேற்பும், ஏமாற்றமும்

Added : ஆக 15, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழக வரலாற்றில் முதன் முறையாக, வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:ஜி.அஜிதன், மேலாண் இயக்குனர், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் நிறுவனம்: சொட்டு நீர் பாசனம், உழவர் சந்தை மேம்பாடு, காய்கறி, பழங்களுக்கான குளிர்பதன கிடங்கு இடம் பெற்றிருப்பது

நாமக்கல்: தமிழக வரலாற்றில் முதன் முறையாக, வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:


ஜி.அஜிதன், மேலாண் இயக்குனர், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் நிறுவனம்: சொட்டு நீர் பாசனம், உழவர் சந்தை மேம்பாடு, காய்கறி, பழங்களுக்கான குளிர்பதன கிடங்கு இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. மஞ்சள் ஆராய்ச்சி மையம் பவானியில் அமைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெற்றிலை ஆராய்ச்சி மையம் குறித்து தகவல் இல்லாதது, ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில், வேளாண்மையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது.


கே.பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர், தமிழக விவசாய முன்னேற்ற கழகம்: வாழைப்பழம், சத்துணவில் இணைக்கப்படும் என்ற கல்வியமைச்சரின் அறிவிப்பு வேளாண் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மரவள்ளிக்கு, கூட்டுறவு ஆலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுவும், இடம்பெறவில்லை. வேளாண் நிதி நிலை அறிக்கையை வரவேற்றாலும், அதில் உள்ள சாராம்சம் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது.


கே.ரவிச்சந்திரன், தலைவர், தரிசுநில விவசாயிகள் சங்கம், நாமக்கல்:மானாவாரி நிலத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு மானியம், நிகர சாகுபடி பரப்பை, 60 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை, கூட்டு பண்ணை விவசாய திட்டம், கொல்லிமலையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், மிளகு பதப்படுத்தும் தொழில் போன்ற திட்டங்கள் வரவேற்கும் வகையில் இருந்தாலும், தரிசுநில விவசாயிகள் எதிர்பார்த்த, போர்வெல் அமைத்து மின் இணைப்பு திட்டம் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.


பி.எம்.நல்லேந்திரன், பொத்தனூர்: ப.வேலூர் அருகே இருக்கூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறாதது, வாழைத்தார் சேமிப்பு கிடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகாதது, கோரை சேமிப்பு கிடங்கு, கோரைக்கு அரசே உரிய விலையை நிர்ணயிப்பது குறித்து நடவடிக்கைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகாதது தி.மு.க., அரசின் மேம்போக்கான தன்மையை வெளிப்படுத்துகிறது.


மு.கதிர்வேல், இயற்கை விவசாயி, பள்ளிபாளையம்: இளைய தலைமுறைக்கு விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் பட்ஜெட் உள்ளது. பனை மரங்கள் அதிகரிக்கவும், பனை விதைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாசன நீர்வழித் தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.


எஸ். கொமாரசாமி, மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர், குமாரபாளையம்: சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவு படுத்தப்படும். 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்க, 5,000 கோடி நிதி ஒதுக்கீடு, மதிய உணவு திட்டம், ரேஷன் கடைகளில் பயிறு வகைகள் வினியோகம், படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஊரக இளைஞர் திறன் மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கவை


என்.நடேசன், கொல்லப்பட்டி: உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் திட்டங்கள், உழவர் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பயறு வகைகளை மதிய உணவுத் திட்டத்தில் சேர்த்தல், பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்தல், சிறு குறு விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் உள்ளன. விவசாயிகள் நலன், தமிழகத்தின் எதிர்கால நலன் இரண்டையும் கருத்தில் கொண்ட சிறப்பான பட்ஜெட்.


சுந்தரராஜன், விவசாயி, சாலப்பாளையம்: விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்தது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொல்லிமலையில் பயிரிடப்படும் மிளகிற்கு புவி சார் குறியிடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மிளகு பதப்படுத்தும் கூடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கொல்லிமலை மக்களுக்கு நல்ல அறிவிப்பாக கருதப்படுகிறது. ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் எனும் புதிய திட்டம் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


பெ. சரவ ணன், இயற்கை விவசாயி, அரியாகவுண்டம்பட்டி: வேளாண்துறையில் இயற்கை விவசாயத்திற்கு தனித்துறை அமைத்திருப்பது, இடு பொருளுக்கு மானியம் வழங்குவது வரவேற்கதக்கது. உற்பத்தி மானியம் வழங்காதது ஏமாற்றம். நாமக்கல் வறட்சி மாவட்டமாக இருப்பதால், சொட்டுநீர் பாசனத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். சொட்டுநீரில் தற்போது, 4க்கு 2 அடியில் சொட்டுநீர் பாசனம் அமைக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதை, 3 அடிக்கு, 13/4 அடிக்கு மாற்றி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.


ஏ.கே. பாஸ்கர், காய்கறி மண்டி, மங்களபுரம்: மின் மோட்டார் பம்ப் செட்டுக்கு மானியம் மத்திய அரசு திட்டத்திலேயே உள்ளது. விவசாயத்தை தெரிந்துகொள்ள வேளாண் அருங்காட்சியம் அமைக்க நிதி ஒதுக்குவது பயனற்றது. கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைப்பதாக கூறியிருப்பது வரவேற்கதக்கது. மற்றபடி வேளாண் பட்ஜெட்டில் கூறியுள்ள திட்டங்கள் அனைத்தும் டெண்டர் மூலம் அரசியல்வாதிகளுக்கு பணம் கொழிக்கச் செய்யும் அவ்வளவுதான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X