காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றிய பயங்கரவாதியின் தந்தை

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.கடந்த 2016 ம் ஆண்டு, காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்த புர்ஹான்
Terrorist, BurhanWani, Father, National Flag, J&K, Pulwama,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

கடந்த 2016 ம் ஆண்டு, காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்த புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தை முஷாபர் வானி, புல்வாமா மாவட்டம் டிராலில் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இன்று(ஆக.,15) சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்வி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களது அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு உத்தரவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும். தேசியக்கொடி ஏற்றிய வீடியோ, புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


latest tamil news


இதனை தொடர்ந்து, முஷாபர் வானி , தான் பணியாற்றும் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 23 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால், பல பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranganathan - Doha,கத்தார்
16-ஆக-202108:39:04 IST Report Abuse
Ranganathan Let Wisdom and Good will the eyes of Kashmiri's. Now it is time for Kashmiri Muslims to join Whole heartedly to India and strengthen the Nation.
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
16-ஆக-202106:34:00 IST Report Abuse
மு. செந்தமிழன் சுட்டுப்போட்டாலும் இந்த கூட்டத்திற்கு தேசப்பற்று வராது. வலுக்கட்டாயமான உத்தரவுமூலம் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-ஆக-202105:11:35 IST Report Abuse
Mani . V காஷ்மீரில் மட்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X