தலிபான் வசமானது தலைநகர் காபூல்: வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கனி

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான் வசமானதை அடுத்து அதிபர் அஷ்ரப் கனி காபூல் நகரை விட்டு வெளியேறினார். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது:ஆப்கனில் பல மாகாணங்களை கைப்பற்றி வந்த தலிபான் பயங்கரவாதிகள், தலைநகர் காபூலுக்குள், அனைத்து பகுதிகளில் இருந்தும் நுழைந்தனர். இதனால், அரசு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான் வசமானதை அடுத்து அதிபர் அஷ்ரப் கனி காபூல் நகரை விட்டு வெளியேறினார். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது:

ஆப்கனில் பல மாகாணங்களை கைப்பற்றி வந்த தலிபான் பயங்கரவாதிகள், தலைநகர் காபூலுக்குள், அனைத்து பகுதிகளில் இருந்தும் நுழைந்தனர். இதனால், அரசு அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் வெளியேறினர். அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக அதிபர் மாளிகையில் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியதுடன் தலைநகர் காபூலை விட்டு வெளியேறி விட்டாதகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இடைக்கால அரசின் அதிபராக அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய நாடான ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தை 1991ல் கைப்பற்றிய தலிபான், 2001ல் அமெரிக்க ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டது.


கடும் சண்டைஅதன்பின், ஆப்கனில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து இம்மாத இறுதியில் வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தலிபான் இறங்கியுள்ளது. கடந்த மூன்று வார சண்டையில் 13 மாகாணங்களை தலிபான் கைப்பற்றியுள்ளது. கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான ஜலாலாபாத்தை தலிபான் தீவிரவாதிகள் இன்று (ஆக., 15) கைப்பற்றினர். அந்த நகரை சண்டையிடாமலே கைப்பற்றியதாக தெரிவித்து உள்ளனர். ஆப்கனில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

தொடர்ந்து, கடும் மோதலில் ஈடுபட்ட தலிபான்கள் காபூல் நகருக்குள் அனைத்து பகுதிக்குள் இருந்தும் நுழைந்தனர். அங்குள்ள கனக்கன், குராபாத் பாக்மான் மாவட்டங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தெரிகிறது. இதனையறிந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். இதனால், அங்கு இரு தரப்புக்கு இடையே துப்பாக்கி சண்டை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், தாக்குதல் நடத்த விருப்பமில்லை; வலுக்கட்டாயமாக நகரை கைப்பற்ற விரும்பவில்லை எனவும், அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என தலிபான்கள் கூறிவந்தனர்.
அதற்காக தலிபான் அமைப்பின் பிரதிநிதிகள், ஆப்கன் அதிபர் மாளிகையில் அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.


latest tamil news
வெளியேறினார் அதிபர்

இந்நிலையில் தலைநகர் காபூலை பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலிபான் படைகள் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஆக-202111:40:35 IST Report Abuse
Lion Drsekar நேற்று ஒரு புகைப்படத்துடன் வந்த செய்தி கடைசியா இந்திய விமானம் அங்கிருந்து கிளம்பியது ??? வந்தே மாதரம்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
16-ஆக-202111:37:03 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஆப்கனிஸ்தான் பற்றி கவலைபடுவர்கள் இந்தியாவில் ஆர் ஸ் எஸ் கூட்டத்தின் கூட்டாளியின் ஆட்சி எப்படி இருக்கு என்று சொல்லவேண்டும் 10 சதவீதை அந்தக்கட்சியின் எம் பி க்களும் மீதம் மாநில கட்சிகளின் கூட்டணி எம் பி க்கள் இருக்கும் போதே இந்த கலாட்ட செய்யபவர்கள் நினைத்து பாருங்கள் ஆப்கானை விட கேவலமாக்கிவிடுவார்கள், இங்கே இப்படி புலம்புவார்கள் ஹிந்து ராஷ்டிர என்ற முழக்கத்துக்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, மேலும் நம் நாட்டில் மீறப்படும் மனித நேய விரோத செயல்களை மத கண்ணோட்டத்தில் ஆதரித்தோம் என்றல் இங்கேயும் ஒரு ஆப்கன் உருவாக முயற்சிக்கிறோம் என்று அர்த்தம் புரிந்து கொள்ளுவோம் இங்கே இதை ரசிப்பவர்கள் அங்கே நடப்பதை எதிர்க்கிறோம் என்பது மட்டும் உண்மை
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
16-ஆக-202110:06:25 IST Report Abuse
திரு.திருராம் சிவன் சொத்து குல நாசம் என்பதன் கண்முன் நிரூபணம் ஆப்கான். கஜினி முகமது பாளம் பாளமாக தங்கத்தை யானைகள் மீது 18 முறை சோம்நாத் சிவன் கோயில் மீது படை எடுத்து கொள்ளையடித்து ஆப்கான் நாட்டை சொர்கத்துக்கு நிகராக ஆக்கினான், அவன் குலம் இன்று ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டு கட்டிடங்கள் கட்டாந்தரைகளாகி உலக நாடுகளிடம் பிச்சை கேட்கும் நிலைக்கு ஆப்கான் நாடே தள்ளப்பட்டுள்து, எனவே இன்று கோயில் சொத்துக்களை அனுபவித்துகொண்டு சுகமாக இருக்கிறோம், 10 தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டோம் என இறுமாந்திருப்போர்க்கு இது எச்சரிக்கை. ஒரு நொடியில் உலகினை மாற்றும் ஈசனால் உங்களின் சொத்துக்களை காலிசெய்ய எத்தனை நிமிடங்கள் வேண்டும்?????
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
16-ஆக-202110:29:04 IST Report Abuse
R MURALIDHARANஅருமையான பதிவு. கோவில் சொத்துக்களை மட்டுமல்ல மக்களின் சொத்துக்கள் ஏமாற்றி லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்கள் யாவும் தலைமுறை நாசத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X