பார்லி.,யில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மோசம்: கோயல்

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (10)
Advertisement
புதுடில்லி:பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மிக மோசமாக இருந்ததாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறி உள்ளார்.மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பியுஷ் கோயல் கூறியதாவது: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை அறிமுகம்

புதுடில்லி:பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மிக மோசமாக இருந்ததாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறி உள்ளார்.மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பியுஷ் கோயல் கூறியதாவது:





latest tamil news



பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை அறிமுகம் செய்தார்.இது, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரிய நடைமுறை. ஆனால் முதல் முறையாக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அதனை அனுமதிக்காமல் இடையூறு செய்தனர்.போட்டி அரசியல் காரணமாக நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் மிக மோசமாக செயல்பட்டனர்.


latest tamil news




இதனால்தான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினோம். கேரள சட்டசபையில் முறைகேடாக நடந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது.அதேபோல் பார்லி.,யில் விதிமீறிய எம்.பி.,க் கள் சிலரும், தங்கள் செயல்களின் விளைவுகளை அனுபவிப்பர் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
16-ஆக-202111:37:54 IST Report Abuse
Shaikh Miyakkhan எதிர்கட்சிகளை மதிக்க தெரியாத ,மெஜாரிட்டியாக இருப்பதால் எந்த ஒரு தீர்மானத்தையும் விரிவாக விவாதிக்காமல் மிக பாராளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காமல் நடந்து கொள்கின்ற மோசமான அரசு நடந்து கொள்வதை விட எதிரிக்கட்சிகள் தவறாக நடக்க வில்லை . அரசு தான் ஜனநாயகத்தை மதிக்காமல் அதிபர்ஆட்சி என்ற மமதையில் நடக்கின்றது . பாராளுமன்ற ஜனநாயத்தை மதித்து எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பு அளித்து அவர்களுடய கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவும் அதை விட்டு விட்டு எதிர்கட்சிகளை குறை சொல்லுவதை தவிக்கவும் நீதிபதிகளே அரசின் நடவடிக்கைகளுக்கு குறை சொல்லுகின்ற கொடுமை உங்களது ஆட்சி தான் நடக்கின்றது சார்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஆக-202109:10:05 IST Report Abuse
Sampath Kumar இதுக்கு தான் முற்பகல் செயின் பிற்பகல் தானே விளையும் என்பது .விதை போட்டது நீங்க அறுவடை செயுங்க
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-ஆக-202105:08:49 IST Report Abuse
Mani . V இது போன்ற கலாசாரத்தை ஆரம்பித்து வைத்ததே நீங்கள் தான் யுவர் ஹானர். ஒருவேளை இதுதான் கர்மாவோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X