பார்லி.,யில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மோசம்: கோயல்| Dinamalar

பார்லி.,யில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மோசம்: கோயல்

Updated : ஆக 15, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (10) | |
புதுடில்லி:பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மிக மோசமாக இருந்ததாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறி உள்ளார்.மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பியுஷ் கோயல் கூறியதாவது: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை அறிமுகம்

புதுடில்லி:பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை மிக மோசமாக இருந்ததாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறி உள்ளார்.மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பியுஷ் கோயல் கூறியதாவது:



latest tamil news



பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களை அறிமுகம் செய்தார்.இது, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரிய நடைமுறை. ஆனால் முதல் முறையாக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அதனை அனுமதிக்காமல் இடையூறு செய்தனர்.போட்டி அரசியல் காரணமாக நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் மிக மோசமாக செயல்பட்டனர்.


latest tamil news





இதனால்தான் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினோம். கேரள சட்டசபையில் முறைகேடாக நடந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது.அதேபோல் பார்லி.,யில் விதிமீறிய எம்.பி.,க் கள் சிலரும், தங்கள் செயல்களின் விளைவுகளை அனுபவிப்பர் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X