பொது செய்தி

இந்தியா

'பார்லி., செல்வோம்!'சட்டங்கள் இயற்றுவது எதற்காக என தெரிந்து கொள்வோம்

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 15, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: ''பார்லிமென்டில் சட்ட மசோதாக்கள் விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்படுவது வருத்தம் அளிக்கிறது. எதற்காக சட்டம் இயற்றப்படுகிறது என்பது யாருக்கும் தெரிவது இல்லை. முன்பெல்லாம் இதற்காக பார்லி.,யில் நீண்ட விவாதம் நடக்கும். ''எனவே, சட்டம் எதற்காக இயற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் பார்லி.,க்கு உறுப்பினர்களாக செல்ல வேண்டும்,''
 'பார்லி., செல்வோம்!,'சட்டங்கள், இயற்றுவது, எதற்காக,என தெரிந்து, கொள்கவோம்:

புதுடில்லி: ''பார்லிமென்டில் சட்ட மசோதாக்கள் விவாதங்கள் இன்றி நிறைவேற்றப்படுவது வருத்தம் அளிக்கிறது. எதற்காக சட்டம் இயற்றப்படுகிறது என்பது யாருக்கும் தெரிவது இல்லை. முன்பெல்லாம் இதற்காக பார்லி.,யில் நீண்ட விவாதம் நடக்கும்.

''எனவே, சட்டம் எதற்காக இயற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் பார்லி.,க்கு உறுப்பினர்களாக செல்ல வேண்டும்,'' என, டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார். இந்த நிகழ்ச்சியில் சபைகளின் பழைய மாண்பு குறித்து அவர் மனம் திறந்து பேசினார்.

பார்லி., மழைக்கால கூட்ட தொடர், திட்டமிட்டதை விட முன்னதாகவே முடிவுக்கு வந்தது. 'பெகாசஸ்' உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உட்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

சுதந்திர போராட்டத்தில் முன்னிலை வகித்த வக்கீல்கள் இன்று அரசியலை விட்டு ஒதுங்கி நிற்காமல், மக்களுக்காக சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் இடம்பெற வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி என் வி ரமணா உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் ஜஸ்டிஸ் ரமணா நிகழ்த்திய சுதந்திர தின உரை இது: #ChiefJusticeofIndia #NV_Ramana #debates #clarityinlaws #professionals

இந்த அமளிகளுக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. பார்லி.,யில் விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு பல்வேறு எதிர்கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர்.இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி உச்ச நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ரமணா பங்கேற்று மூவர்ண கொடியை ஏற்றினார்.இதில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், வி.ராமசுப்ரமணியன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உட்பட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.


துரதிருஷ்டவசமானது:

நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:நம் நாட்டின் நீண்ட நெடிய சுதந்திர போராட்டத்திற்கு நீதித்துறையைச் சேர்ந்த பலர் தலைமை வகித்துள்ளனர். மகாத்மா காந்தி, பாபு ராஜேந்திர பிரசாத் போன்றோர் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள். தங்கள் சொத்துக்கள், குடும்பம் மற்றும் வாழ்க்கையை அர்ப்பணித்து சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினர்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் முதல் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களாகவும், நீதித்துறையை சேர்ந்தவர்களாகவுமே இருந்தனர்.அப்போதெல்லாம் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் போது, அது மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து சபையில் நீண்ட விவாதங்கள் நடக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன் தொழில்துறை விவகார சட்டம், பார்லி.,யில் தாக்கல் செய்யப் பட்ட போது, அவை உழைக்கும் வர்க்கத்தினரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி., ஒருவர் விரிவாக விவாதித்ததை பார்த்துள்ளேன். இதுபோன்ற விவாதங்கள் நீதிமன்றங்களின் சுமையை குறைக்கின்றன.

இந்த சட்டம் தொடர்பான வழக்கு பிற்காலத்தில் நீதிமன்றத்திற்கு வரும்போது, அந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இன்றோ விவாதங்கள் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது மிகவும் துரதிஷ்டவசமானது. வருத்தம் அளிப்பதாக உள்ளது.பார்லி.,யில் விவாதமின்றி சட்டங்களை நிறைவேற்றும் செயல்பாட்டில் நிறைய இடைவெளியும், தெளிவற்ற தன்மையும் உள்ளது.


மக்களுக்கு சிரமம்

எந்த நோக்கத்திற்காக சட்டங்கள் இயற்றப் படுகின்றன என்பது எங்களுக்கு தெரிவதில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பார்லிமென்டிலும், சட்டசபையிலும், நீதித்துறையை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இல்லாததால், இதுபோன்ற நிலை உருவாகிறது.

எனவே வழக்கறிஞர்கள் நீதித்துறையில் மட்டும் கவனம் செலுத்தி, நிறைய பணம் சம்பாதித்து, வசதியான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். நம் அனுபவங்கள் இந்த நாட்டுக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீதித்துறையில் உள்ளவர்களும் பார்லிமென்ட் செல்ல வேண்டும். சட்டங்கள் இயற்றப்படுவது எதற்காக என்பதை தெரிந்து கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar Iyer - Chester Springs,யூ.எஸ்.ஏ
16-ஆக-202119:01:41 IST Report Abuse
Rajasekar Iyer Chief Justice is speaking like public. Has he got authority to stop the bills passed in both houses of parliament. Let the Supreme Court focus more to cleanup judiciary functioning in India. First Modi Government should enact the required laws to bring accountability for Judges in passing judgements. Today there is no transparency in Judiciary because they cannot be questioned. Wrong and biased judgements are becoming very common. People are losing faith in our judiciary. This is the ground reality today.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
16-ஆக-202117:03:39 IST Report Abuse
DVRR mudhalil neengal செய்யவேண்டியது இந்த 4.5 கோடி உங்கள் கோர்ட்டில் இருக்கின்றதே அதை எப்போது வெறும் ஆயிரம் ஆக்கப்போகிண்றீர்கள். கைது விசாரணை ஜாமீன் பெரிய தலை - அரசியல்வாதி பணம் கொழுத்தவன் என்றால் அதை எப்போது நீக்கப்போகிண்றீர்கள்???எந்த ஒரு வழக்கும் 10 வருடம் முதல் 20 வருடம் வரை இழுத்தடிப்பு அதை ஒரு மாதத்திற்குள் எப்போது முடித்து வைக்கப்போகிண்றீர்கள். இதை முதலில் செய்யுங்கள்.
Rate this:
Cancel
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-202116:02:25 IST Report Abuse
Kumar எதிர்க் கட்சிகள் விவாதம் பண்ண தயாராவே இல்லையே.. பெகாசஸ் விவகாரத்தை சொல்லி முடக்கதான் பாக்குறாங்க.. பெகாசஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எவனாவது புகார் கொடுத்துருக்கானா.. தற்பொழுது இருக்கும் எதிர்க் கட்சிகளிடம் விவாதிப்பதால் எந்தப் பயனும் இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X