புதுடில்லி: சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தின் முகப்பில் நேற்று பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டின் பாரம்பரிய நடனங்களை வைத்து, கூகுள் 'டூடுல்' வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த நாளின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்பு சித்திரத்தை வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது. சித்திரம், 'கூகுள் டூடுல்' என அழைக்கப்படுகிறது.நம் நாட்டின் 75வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை கொண்டாடும் விதமாக கூகுள் இணைய பக்கத்தின் முகப்பில் நம் நாட்டின் கலாசார நடனங்களை வைத்து, கூகுள் டூடுல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவை சேர்ந்த பிரபல கலைஞர் சயன் முகர்ஜியால் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த சித்திரத்தில், ஆறு நடனக் கலைஞர்களின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. தமிழக பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் துவங்கி, அசாமின் பிஹு நடனக்கலைஞர், பஞ்சாப் மாநிலத்தின் பாங்க்ரா நடனக்கலைஞரின் சித்திரமும் இடம்பெற்றுள்ளன.இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புருலியா சாவ், குஜராத்தின் கார்பா மற்றும் கேரள மாநிலத்தின் கதகளி உள்ளிட்ட பாரம்பரிய நடனக்கலைஞர்களின் சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE