75வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலம்: வந்தே மாதரம் ஒன்றே தாரகம்! பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக் கொடி| Dinamalar

தமிழ்நாடு

75வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலம்: வந்தே மாதரம் ஒன்றே தாரகம்! பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக் கொடி

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021
Share
திருப்பூர்:தொற்று கட்டுப்பாடுகளை பின்பற்றி, திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், 75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில், 7.25 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாவட்ட நிர்வாகம் சார்பில், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், 75வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் வினீத்
75வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலம்: வந்தே மாதரம் ஒன்றே தாரகம்! பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக் கொடி

திருப்பூர்:தொற்று கட்டுப்பாடுகளை பின்பற்றி, திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், 75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில், 7.25 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகம் சார்பில், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், 75வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் வினீத் தேசியக் கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.மூவர்ணக்கொடியில் பலுான்கள், சமாதானத்தை குறிக்கும் வகையில் புறாக்கள் பறக்க விடப்பட்டன. வருவாய், சுகாதாரம், போலீஸ் என 23 துறைகளை சேர்ந்த, 175 அலுவலர்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

தொற்றுக் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல், பணியாற்றிய, 106 முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது; 213 பயனாளிகளுக்கு டிராக்டர், தெளிப்பு நீர் பாசன கருவி, இலவச மூன்று சக்கர சைக்கிள், விதவை உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், வீட்டுமனைபட்டா உள்ளிட்ட 7.25 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், போலீஸ் கமிஷனர் வனிதா, எஸ்.பி., செஷாங்சாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொற்று பரவல் காரணமாக, கலைநிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒலிக்காததமிழ்த்தாய் வாழ்த்துசுதந்திர தின விழா, தேசிய கொடியேற்றுவதற்கு முன்பு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வழக்கம். ஆனால், நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடவில்லை. விழா நிறைவில், நாட்டுப்பண் ஒலிக்கப்பட்டது.
மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தேசிய கொடியேற்றினார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஆய்வாளர், ஊழியர் உள்ளிட்ட முன்கள பணியாளரை பாராட்டி, கவுரவிக்கப்பட்டது; சான்றிதழ் வழங்கப்பட்டது.

குமரன் நினைவு ஸ்துாபி, ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள குமரன் நினைவிடத்தில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களிலும், கட்சியினர், சமூக நல அமைப்புகள் சார்பிலும், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 'வந்தே மாதரம்' என்று தேச உணர்வு பொங்க, முழக்கம் எழுப்பப்பட்டது. தொற்று தடுப்பு வழிமுறைகடைபிடிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X