புதுடில்லி-'நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1.5 கோடிக்கும் அதிகமானோர் தேசிய கீதத்தை பாடி, அதன் 'வீடியோ'வை பதிவிட்டுள்ளனர்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நம் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை, 'அம்ரூத் மஹோத்சவ்' என்ற பெயரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14 வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பல்வேறு நாடுகள்இதையொட்டி மத்திய கலாசாரத்துறை அமைச்சகம்ஒரு புதிய நிகழ்ச்சியை அறிவித்திருந்தது. 'தேசிய கீதத்தை தங்கள் சொந்த குரலில் பாடி அதன் வீடியோவை அரசு இணைய தளத்தில் ஆக., 15ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, அறிவித்தது.
இந்நிலையில் மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சுதந்திர தினமான ஆக., 15ம் தேதிக்குள் தங்கள் குரலில் தேசிய கீதத்தைப் பாடி, அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தியிருந்தோம்.இதற்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியர்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இதில் உற்சாகமாகக் கலந்து கொண்டு உள்ளனர்.

கலைஞர்கள், சான்றோர், தலைவர்கள், அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கேற்று உள்ளனர். தேசிய கீதம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், அருணாச்சலப் பிரதேசம் துவங்கி கட்ச் வரையிலும் ஓங்கி ஒலிக்கிறது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அளித்துள்ள ஆதரவு, இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் எண்ணம் தாய்நாட்டின் மீது தான் இருக்கும் என்பதை உணர்த்திஉள்ளது.
இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பதிவுகள் வந்துள்ளன. தேசிய கீதம், நம் பெருமிதத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை ஆவணப்படுத்தும் இந்த முயற்சி அனைவருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்து உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது