லெபனானில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 20 பேர் பலி

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021
Share
Advertisement
பெய்ரூட்-மத்திய கிழக்கு நாடான லெபனானில், பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.லெபனான் நாட்டின் அண்டை நாடான சிரியா எல்லை அருகே உள்ளது லெய்ல் கிராமம். லெபனானில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை சிரியாவுக்கு கடத்தப்படுகின்றன. அதேபோல், கடத்தி வரப்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை

பெய்ரூட்-மத்திய கிழக்கு நாடான லெபனானில், பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



லெபனான் நாட்டின் அண்டை நாடான சிரியா எல்லை அருகே உள்ளது லெய்ல் கிராமம். லெபனானில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை சிரியாவுக்கு கடத்தப்படுகின்றன. அதேபோல், கடத்தி வரப்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை லெபனான் ராணுவம் பறிமுதல் செய்து, லெய்ல் கிராமத்தில் நிறுத்தி வைத்திருந்தது.


latest tamil news



நேற்று காலை அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்தது. இதில் 20 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 80 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.லெபனான் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற, ரத்த தானம் செய்ய வரும்படி பொதுமக்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X