தமிழ்நாடு

கோலாகலம்: விழுப்புரத்தில் சுதந்திர தின விழா... ரூ.1.67 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஆக 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் 75வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகள் சார்பில், 331 பயனாளிகளுக்கு, 1 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 311 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பணியாற்றிய 223 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் மைதானத்தில் 75வது
 கோலாகலம்: விழுப்புரத்தில் சுதந்திர தின விழா... ரூ.1.67 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

விழுப்புரம்,-விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் 75வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகள் சார்பில், 331 பயனாளிகளுக்கு, 1 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 311 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய 223 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் மைதானத்தில் 75வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, காலை 9.05 மணிக்கு தேசிய கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். வெண்புறாக்கள், வண்ண பலுான்கள் பறக்கவிடப்பட்டது.வருவாய் துறை சார்பில் ஒருவருக்கு 97 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனைக்கான நிதி, சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒருவருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் 1 லட்சம், மாதம் ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் என ஒருவருக்கு விதவை உதவிதொகை உட்பட பல துறைகள் சார்பில், 17 பயனாளிகளுக்கு 24 லட்சத்து 10 ஆயிரத்து 662 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மாவட்டத்தில், இதுபோல் பல துறைகள் சார்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள 331 பயனாளிகளுக்கு 1 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 311 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 10 சவரன் நகையை எடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்த டீக்கடை ஊழியர் விஜயகுமாரின் நேர்மையை பாராட்டி அவருக்கு, கலெக்டர் வீட்டு மனைபட்டா வழங்கினார்.

தொடர்ந்து, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர், செவிலியர், அலுவலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்பட 223 பேருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.கோலியனுார் பகுதியில் மறைந்த சுதந்திரப்போராட்ட தியாகி அபரன்ஜி குப்தாவின் வாரிசுதாரர் சுலோச்சனாவிற்கு, கலெக்டர் மோகன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.சுலோச்சனா தனது சொந்த சேமிப்பில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 5 ஆயிரம் ரொக்கத்தை கலெக்டரிடம் வழங்கினார்.இதே போல், மாவட்டத்தில் 20 சுதந்திர போராட்ட தியாகிகள், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு உயர் அலுவலர்கள் மூலம் கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாக, கலெக்டர் மோகன், விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விழாவில், டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, தனித்துணை கலெக்டர் பெருமாள், உதவி இயக்குநர் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X