தமிழ்நாடு

கோலாகலம்; கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினவிழா...ரூ. 28 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஆக 16, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழாவையொட்டி, கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 156 பேருக்கு நற்சான்றிதழ், 69 பேருக்கு ரூ. 28.3 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்கத்திற்கு பின்பு, இரண்டாவது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்
 கோலாகலம்; கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினவிழா...ரூ. 28 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழாவையொட்டி, கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 156 பேருக்கு நற்சான்றிதழ், 69 பேருக்கு ரூ. 28.3 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்கத்திற்கு பின்பு, இரண்டாவது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.ஒற்றுமையை வலியுறுத்தி, கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி., ஜியாவுல்ஹக், டி.ஆர்.ஓ., விஜய்பாபு ஆகியோர் வெண் புறாக்கள் மற்றும் மூவர்ண பலுான்கள் பறக்கவிட்டனர்.

பின்னர், காவல் துறையின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பாக பணிபுரிந்த காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, மருத்துவம் மற்றும் சுகாதார துறை, நகராட்சி, பேரூராட்சி, வட்டார போக்குவரத்து அலுவலகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தீயணைப்பு மீட்புத்துறை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, சித்த மருத்துவம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் 156 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், செந்தில்குமார், சி.இ.ஓ., விஜயலட்சுமி, ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சாய்வர்த்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ்,, திட்ட இயக்குனர் மணி, ஏ.டி.எஸ்.பி.,க்கள் விஜய் கார்த்திக்ராஜ், ஜவஹர்லால், சுப்பராயன், டி.எஸ்.பி.,க்கள் ராஜலஷ்மி, திருமேனி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மஞ்சுளா, மருத்துவக்கல்லுாரி டீன் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையர் குமரன், பொறியாளர் பாரதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்ராயலு உட்பட பலர் பங்கேற்றனர்.சுதந்திர தின விழாவில், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு வகையான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கமாகும்.இந்நிலையில், தற்போது கொரோனா பரவலால் கலை நிகழ்ச்சிகள் ஏதுமின்றி எளிமையான முறையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X