சென்னை: சுதந்திர தின விழாவை யொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த காந்தியின் கைராட்டை திறப்பு விழாவில், நடிகர் சிவகுமார் பங்கேற்றார்.

நாட்டின் 75வது சுதந்திர தின பவள விழாவை ஒட்டி, சென்னை சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் அமைந்துள்ள 150 அடி உயரக்கொடி கம்பத்தில், மாநில தலைவர் அழகிரி நேற்று தேசிய கொடி ஏற்றினார். கைராட்டைபின், சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்பட்டுள்ள காந்தியின் கைராட்டையை திறந்து வைத்தார்.
காந்தியின் கைராட்டை நுாலும் வெளியிடப்பட்டது.விழாவில், அழகிரி பேசுகையில், ''நாட்டின் சுதந்திரத்தை, சுதந்திர போராட்ட வீரர்களின் மாபெரும் தியாகத்தால் பெற்றோம். சுதந்திரத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். ''வேற்றுமையில் ஒற்றுமை கண்டார் காந்தி. தற்போது இருக்கிற பா.ஜ.,வினர், ஒற்றுமையில் வேற்றுமை காண்கின்றனர்,'' என்றார்.கைராட்டை திறப்பு விழாவில், சேவாதள தொண்டர்கள் அணியும் வெள்ளை குல்லா அணிந்து நடிகர் சிவகுமார் பங்கேற்றார்.

அவருக்கு, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவராக, மறைந்த ஞானதேசிகன் இருந்த போது, சத்தியமூர்த்திபவனில், கண்ணதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எதிர்பார்ப்புஅப்போது, சிறப்பு அழைப்பாளராக சிவகுமார் பங்கேற்று பேசினார். தற்போது, காந்தியின் கைராட்டை திறப்பு விழாவில் சிவகுமார் பங்கேற்றுள்ளதால், அவர் காங்., அனுதாபியாக தன்னை காட்டிக் கொண்டுள்ளார். விரைவில், காங்., - எம்.பி., ராகுல் முன்னிலையில், சிவகுமார் காங்கிரசில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE