அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 மாதத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன்; தி.மு.க., மீது எச்.ராஜா குற்றச்சாட்டு

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
கமுதி: ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க., அரசின் சாதனை என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மரியாதை செய்த பின்பு நினைவிடம் முன் தேசியக்கொடி ஏற்றினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது கொரோனா
BJP, HRaja, DMK, பாஜக, எச் ராஜா, தமிழகம், கடன், திமுக

கமுதி: ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க., அரசின் சாதனை என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மரியாதை செய்த பின்பு நினைவிடம் முன் தேசியக்கொடி ஏற்றினார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது கொரோனா காரணமாக கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அப்போது அதனையும் மீறி தி.மு.க., பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தியது.
தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க., கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த தடை என்கிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் தவிர புதிய திட்டங்கள் பெரிதாக எதுவும் இல்லை.தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.


latest tamil news



ஆனால் இன்று தகுதி உள்ளவர்களை கண்டறிந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 44 ஆயிரம் கோயில் உள்ளது. அதில் 40 ஆயிரம் கோயில்களில் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக பணியாற்றி வருகின்றனர்.
தமிழக முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் தமிழக மக்களை திசை திருப்புகிறார்கள். மற்ற மத வழிபாடுகளையும் தமிழில் நடத்த தி.மு.க., அரசு வலியுறுத்துமா. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
16-ஆக-202121:16:13 IST Report Abuse
balakrishnan திராவிட ஆட்சி இருக்கும்வரை கடனும் தொடரும் .மக்கள் திருந்தவேண்டும் .
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
16-ஆக-202121:12:30 IST Report Abuse
E. RAJAVELU எச்ச இலை சொல்றதெல்லாம் ஒரு விஷயம்னு......
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
16-ஆக-202119:32:41 IST Report Abuse
K. V. Ramani Rockfort ஹிந்து மத வழிபாடுகளை தி.மு.க. அரசு தமிழில் நடத்த அறிவுறுத்துவது போல மற்ற மத வழிபாடுகளையும் நடத்த நடவடிக்கை எடுக்குமா?
Rate this:
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
16-ஆக-202122:00:35 IST Report Abuse
 அத்வைத் ராமன் 10 வருடம் தூங்கி கொண்டு இருநதியா என்ன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X