புதுடில்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் , பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். முன்னதாக பிரபல இசை கலைஞர்களின் இசையஞ்சலி நடந்தது.

சொற்பொழிவாளர், சமூக சேவகர், கவிஞர், பத்திரிகையாளர், பார்லிமென்டேரியன், நேர்மையான அரசியல்வாதி, அனைவரையும் வசீகரிக்கும் வல்லமை, உயர் பதவியிலும் பரிசுத்தம் என பல்வேறு பெருமைக்குரியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.'அடல்ஜி'என தொண்டர்களால் அழைக்கப்பட்ட வாஜ்பாய், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். பிரம்மச்சரிய வாழ்க்கையைக் கடைப்பிடித்த இவர், காந்திய சோஷலிசத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக திகழ்ந்தார். 1924 டிச.25ல் கிருஷ்ண பிகாரிக்கு மகனாக, மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்தார். கான்பூரில் டி.ஏ.வி., கல்லுாரியில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பயின்றார்.

1999 அக்., 13ல் மூன்றாவது முறை பிரதமரானர். இம்முறை ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். கடந்த 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்தது இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. 'தங்க நாற்கர சாலை' திட்டத்தை அறிமுகப்படுத்தி, சாலை போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்.

ஊழல் கறைபடியாத உத்தமரான வாஜ்பாய் மறைந்து ஆண்டுகள் உருண்டாலும் அவர் என்றும் மக்கள் மனதில் நிற்பார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE