அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக உடன் கூட்டணியில்லை: ராமதாஸ்

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
சென்னை: அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது தான் பா.ம.க.,வின் இலக்கு என்றும், சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக.,வுடன் கூட்டணி இருக்காது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ம.க., தனித்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் பா.ம.க அனைத்து தொகுதியிலும்
PMK, Ramadoss, Assembly Election, Alliance, DMK, ADMK, 2026, பாமக, நிறுவனர், ராமதாஸ், சட்டசபை தேர்தல், திமுக, அதிமுக, கூட்டணி, இல்லை, அன்புமணி

சென்னை: அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது தான் பா.ம.க.,வின் இலக்கு என்றும், சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக.,வுடன் கூட்டணி இருக்காது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ம.க., தனித்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் பா.ம.க அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் நடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது.


latest tamil news


இந்நிலையில், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. எதிர்கட்சியாக அ.தி.மு.க இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும். வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டுக்காக அரசை எத்தனைமுறை வேண்டுமானாலும் பாராட்டலாம். தற்போது பா.ம.க., அ.தி.மு.க உறவு சுமூகமாக உள்ளது, எந்த விரிசலும் இல்லை. 10.5 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக பேசும் அதிமுக தலைவர்களுக்கு சமூகநீதி குறித்த புரிதல் இல்லை.


latest tamil news


உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணியே தொடரும். 2026 சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பா.ம.க.,வின் இலக்கு. வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக., அதிமுக.,வுடன் கூட்டணி இருக்காது. அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான். லோக்சபாத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202106:42:19 IST Report Abuse
மோகனசுந்தரம் உன்னுடைய பேச்சை தண்ணீரில் தான் எழுதணும்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
16-ஆக-202122:51:14 IST Report Abuse
m.viswanathan நம் தமிழகத்தின் சாப கேடு அரசியலை வியாபாரம் ஆக்கிய மட்டமான மனிதர்
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
16-ஆக-202122:00:12 IST Report Abuse
raja அரசியல் கோமாளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X