தலிபான்கள் ஆதிக்கம்: பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து மலாலா கவலை

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: 'ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன்' என, மலாலா தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்லாமாபாத்: 'ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன்' என, மலாலா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



latest tamil news



இந்நிலையில், மலாலா தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கவலையளிக்கிறது. இதனை அதிர்ச்சியுடன் கவனிக்கிறேன். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நினைத்து கவலை கொள்கிறேன். உள்ளூர் தலைவர்கள், பிராந்திய தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் ஆப்கனில் உனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். அங்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும். அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.




latest tamil news



பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், மலாலா உயர் தப்பினார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வந்த மலாலாவுக்கு 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202121:17:18 IST Report Abuse
 kulandai kannan சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு இடமளித்தேன் என்று பெருமை பேசும் ஆமையன், தலிபான்களுக்கு ஆதரவாகப் பேசியவன்தான்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
16-ஆக-202118:23:47 IST Report Abuse
Rasheel ஒருவனை ஒருவன் அடித்து கொண்டு சாவான். எப்படியோ இந்திய பக்கம் திருப்பி விடாமல் இருந்தால் சரிதான். இல்லை என்றால் மொத்தமாக அழித்து நிலத்தை நிரப்ப அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஆக-202117:22:33 IST Report Abuse
Janarthanan ஷரியா சட்டத்தை போற்றும் கும்மலை வேணும் என்றால் தலிபான் நாட்டிற்கு ஏற்றி அனுப்பலாம் .... கூடுவே குடும்ப அடிமை கூட்டத்ததையும் சேர்த்து அனுப்பி வைக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X