துடி துடிக்கும் வலியுடன் சுதந்திர தினவிழா சாதனை நாக்கால் 164 அடி நீள தேசியக்கொடி வரைந்தார்

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உலகின் மிக நீளமாக நாக்குக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்படும் மாணவர் பிரவீன் தனது நாக்கால் 164 நீள தேசியக் கொடியை வரைந்து முடித்துள்ளார் இந்த சாதனையை செய்வதற்கு முன்பாக நாக்கில் ரத்தம் வழியும் அளவு வலியையும் வேதனையையும் அனுபவித்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் திருத்தங்கல்லைச் சார்ந்தவர் மாணவர் பிரவீன்.கோவையில் நான்காம் வருட என்ஜினிரிங்latest tamil news


உலகின் மிக நீளமாக நாக்குக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்படும் மாணவர் பிரவீன் தனது நாக்கால் 164 நீள தேசியக் கொடியை வரைந்து முடித்துள்ளார் இந்த சாதனையை செய்வதற்கு முன்பாக நாக்கில் ரத்தம் வழியும் அளவு வலியையும் வேதனையையும் அனுபவித்தார்.


latest tamil news


விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் திருத்தங்கல்லைச் சார்ந்தவர் மாணவர் பிரவீன்.கோவையில் நான்காம் வருட என்ஜினிரிங் படிக்கிறார்.இவரது நாக்கு வழக்கமான மனிதர்களை இருப்பதை விட நீளமானது.இதை ஆசியன் புக் ரிக்கார்ட்ஸ் குழுவினர் சாதனையாக பதிந்துள்ளனர்.இவரைப் போன்ற நீளமான நாக்கு உள்ளவர்கள் தங்களது நாக்கை நீட்டிக்காட்டுவதுடன் நிறுத்திக் கொள்வர் ஆனால் பிரவீன் தனது நீளமான நாக்கால் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.


latest tamil news


தமிழ் எழுத்துக்கள் 247 ஐயும் நாக்கால் எழுதியுள்ளார் மேலும் சின்ன சின்னதாக நாக்கால் ஒவியும் வரைந்துள்ளார்.75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரிய அளவில் ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தார் உலகில் இதுவரை யாரும் வரைந்திராத நீளத்திற்கு நாக்கால் தேசியக் கொடி ஒவியம் வரைவது என முடிவு செய்தார்.


latest tamil news


இந்த நிகழ்விற்கு ஜூனியர் எம்.ஜி.ஆர்.,என்று சொல்லப்படும் ராமச்சந்திரன் ஸ்பான்சர் செய்தார் நிகழ்வு சென்னை ராமவரம் எம்.ஜி.ஆர்.,தோட்டத்தில் நடந்தது.
நீளமான பேப்பரை விரித்து ஊசி போடப்பயன்படும் சிரிஞ்சில் பேப்ரில் பெயிண்டை பேப்பரில் செலுத்தி தனது நாக்கை பிரஷ் போலாக்கி ஒவியம் வரையத்துவங்கினார்.முக்கால் வாசி ஒவியம் வரைந்த போது மிகவும் சோர்ந்து போனார் இவரது நாக்கில் ரத்தம் வழிய ஆரம்பித்தது ஆனாலும் வைராக்கியத்துடன் ஒவியத்தை வரைந்து முடித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒவியம் வரைய ஆரம்பித்தவர் சுதந்திர தினத்தன்று மாலையில்தான் முடித்தார் இந்த மூன்று நாட்களும் ஜீஸ் போன்ற திரவ உணவையே எடுத்துக் கொண்டார் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே துாங்கினார் இவருக்கு இவரது பெற்றோர் காளிராஜன்-கமலா ஆகியோர் கூடவே உறுதுணையாக இருந்தனர்
தனது இந்த சாதனைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்தால் இன்னும் பல சாதனைகள் செய்ய இருப்பதாக குறிப்பிட்ட பிரவீனிடம் பேசுவதற்கான எண்:7397555637.
-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
16-ஆக-202117:20:09 IST Report Abuse
Indhuindian Absolute madness what is he trying to achieve by these gimmicks?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X