ஆப்கனில் தலிபானுடன் நட்புறவு: சீனா அறிவிப்பு

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்தது. தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தியதுடன் பல முக்கிய நகரங்களை அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கன் அதிபர்
China, Taliban, Friendly Relations, Ready, சீனா, தலிபான்கள், நட்புறவு, தயார், ஆப்கானிஸ்தான்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்தது. தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தியதுடன் பல முக்கிய நகரங்களை அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலையும் கைப்பற்றிய தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரத்தையும் தன்வசப்படுத்தினர். ஆப்கன் அதிபர் மாளிகை உள்பட அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்கள் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தன.


latest tamil news



இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக, தலிபான் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஆதரித்த நிலையில், தற்போது சீனாவும் ஆதரவளித்துள்ளது. மேலும், தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஆக-202122:05:41 IST Report Abuse
முக்கண் மைந்தன் ஒரு மங்கி குருப்புக்கு இது மொளகாய அறச்சி தேச்சாமாரி இருக்கு
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
16-ஆக-202122:00:55 IST Report Abuse
K.n. Dhasarathan ஆயுதங்களை விக்கணுமே ஏற்கனவே சீனா பொருட்களை உலகம் ஒதுக்கிய நிலையில் காசு வேணுமே சீனா யாருடனும் நட்பு கொள்ளும் ஆயுதங்களை வாங்கினால் . அவர்களுக்கு அந்த ஆயுதங்கள் தங்களுக்கு எதிராக திரும்பினாலும் பரவாயில்லை என்கிற போக்கில் இருக்கிறார்கள் .
Rate this:
Cancel
தமிழன்பன் - Hyderabad,இந்தியா
16-ஆக-202120:44:51 IST Report Abuse
தமிழன்பன் அப்போ இவனுங்க கையிலே கூடிய சீக்கிரம் அணு ஆயுதம் கெடச்சுரும்ன்னு சொல்லுங்க. மற்ற உலக நாடுகள் இந்த விசயத்துல உடனடியா ஒழுங்கா ஒரு முடிவு எடுக்கல்லன்னா உலகம் அழிஞ்சுரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X