ஆப்கனில் பரிதாபம்; விமான டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் பலி

Updated : ஆக 16, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தின் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் விமானம் பறந்த போது வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஆப்கன்
3 Fall Off, Plane, Kabul, Some Huddled, Aircraft Wing, ஆப்கானிஸ்தான், காபூல், விமானம், பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தின் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் விமானம் பறந்த போது வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் மூடியதுடன் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. சில விமானங்கள் அங்கிருந்து இயக்கப்பட்டபோது, பலரும் முண்டியடித்து விமானத்தில் ஏறினர். அதேபோல், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றும் காபூலில் இருந்து கிளம்பியது.


latest tamil newsஇதில் ஆப்கனில் இருந்து தப்பித்து செல்லவேண்டும் என பலரும் விமானத்தின் ஓரப்பகுதி, டயர் பகுதியில் தொங்கியபடி சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில், தஞ்சம் கேட்டு ஆப்கன் மக்கள் பலர் விமானத்தை சுற்றி ஓடிவருவதாகவும், மறுபுறம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதை கொண்டாடும் விதமாக தலிபான் ஆதரவாளர்கள் அதை சுற்றி கோஷமிடுவதாகவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், விமானம் நடுவானில் பறந்தநேரத்தில் டயர் பகுதியில் தொங்கியபடி பயணித்தவர்களில் 3 பேர் வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19-ஆக-202119:51:24 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஆப்கானிஸ்தானில் நடை பெறும் சம்பவங்களை இந்தியா ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளை/ தேச துரோகிகளை/ நமது இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பவர்களை இப்பொழுதே இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற தீவிர வாத/ தீவிரவாதங்களுக்கு ஆதரவு தரும் நாட்டிற்கு ஆதரவாக, இந்தியாவிற்கு எதிராக இங்கேயே இருந்துகொண்டு குரல் கொடுப்பவர்களை நாடு கடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியா ஸ்வர்க பூமியாக திகழும்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
17-ஆக-202117:03:28 IST Report Abuse
INDIAN Kumar மத பற்று இருக்க வேண்டும் இவர்களுக்கு மத வெறி அல்லவா இருக்கிறது.
Rate this:
Cancel
17-ஆக-202113:12:11 IST Report Abuse
சந்திரன் இது ஒரு ஆரம்பம். இதேநிலை இந்தியாவில் நடந்தால் கற்பனை பண்ணி பாருங்கள். நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை அவர்கள் நம் மீது போர் தொடுத்தால் இங்குள்ள அவர்கள் இனம் நமக்கு எதிராக களம் இறங்குவார்கள்.முடிவு இன்றைய ஆதரித்த கட்சிகள் காணமல் போகும்.எங்கும் வன்முறை.இந்தியா என்கிற அமைதி பூங்கா அழிந்து போகும்.நாமும் ஒரு நாள் அகதிகளாய் ஆவோம்.நம்மை அழிக்க சீனா காத்துக் கொண்டு உள்ளது.கம்யூனிடுஸ்கள் அவர்கள் பக்கம்.எந்த பக்கமும் தப்பிக்க வழி இல்லை.இறைவனே துணை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X