பெட்ரோல் மீதான வரியை குறைக்காதது ஏன்?

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 16, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
புதுடில்லி : ''முந்தைய காங்., ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்காக வெளியிட்ட, 1.40 லட்சம் கோடி ரூபாய் கடன் பத்திரங்கள் காரணமாக, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடியவில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.டில்லியில் மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மன்மோகன் சிங் தலைமையிலான காங்., அரசு,
பெட்ரோல் ,வரி, நிர்மலா, நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர்

புதுடில்லி : ''முந்தைய காங்., ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்காக வெளியிட்ட, 1.40 லட்சம் கோடி ரூபாய் கடன் பத்திரங்கள் காரணமாக, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடியவில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டில்லியில் மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மன்மோகன் சிங் தலைமையிலான காங்., அரசு, எண்ணெய் நிறுவன மானியத்திற்கு, ரொக்கத்திற்கு பதிலாக, 1.40 லட்சம் கோடி ரூபாய் கடன் பத்திரங்களை வெளியிட்டது. இந்த கடன் பத்திரங்களுக்கு இதுவரை, 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வட்டி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கடன் பத்திரங்கள் முதிர்ச்சி அடைவதால் அவற்றுக்கான தொகையை திரும்பத் தர வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல்மீதான கலால் வரியை குறைக்க முடியாத இக்கட்டில், மத்திய அரசு உள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பேச்சு நடத்த வேண்டும். முன்தேதியிட்ட வரிச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து, அதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்குள் நாட்டின் பணவீக்கம் இருக்கும். சில மாதங்களாக ஜி.எஸ்.டி., மற்றும் நேரடி வரி வருவாய் அதிகரித்துஉள்ளது. பண்டிகை காலம் வருவதால், தேவைகளும், கடன் வளர்ச்சியும், வரி வருவாயும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஆக-202108:46:08 IST Report Abuse
Tgsoundarrajan Balu காங்கிரஸ் மீது பழி போட யோசனை பண்ண இத்தனை நாளா
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஆக-202123:16:04 IST Report Abuse
தமிழவேல் எல்லவனும் எங்கே போயி இருப்பானுவோ 🤔
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
17-ஆக-202122:45:38 IST Report Abuse
Rajas ஜூலை 26, 2021 ல் பெட்ரோல் டீசல் வரியை அதிகமாகியதற்கு காரணம் நாடு முழுக்க ரோடுகளை போட்டது தான் காரணம் என்றார்கள். இப்போது ஆயில் பாண்டை காரணம் காட்டுகிறார்கள். இந்த கும்பல் பொய்யை தவிர வேறு எதையும் சொல்வதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X