திருப்பதி :ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் கோவில் கட்டியுள்ளார்.ஆந்திர மாநிலம்சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியை சேர்ந்தவர்மதுசூதன் ரெட்டி.ஆளும் ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், காளஹஸ்தியில் உள்ள ஜெகண்ணா காலனி அருகில்,முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டி உள்ளார்.இதற்காக 2 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளார்.
இங்கு தொகுதி மக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்கள் சமர்ப்பிக்க ஒரு உண்டியலும் வைத்துள்ளார்.இந்த ஜெகண்ணா நவரத்னா கோவில் நேற்று திறக்கப்பட்டது.இங்கு வருவோருக்கு ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செய்த நலத்திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிகள்அளிக்கப்படுகின்றன.இங்கு ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நவரத்ன திட்டம் குறித்த படங்கள் வைக்கபட்டு உள்ளன.ஆந்திர முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுஉள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE