பால் பூத்தில் 'சரக்கு' கிடைக்குது... போலீசின் பாக்கெட் நிரம்புது!

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 17, 2021
Advertisement
சித்ராவும், மித்ராவும் அருகிலிருந்த ரேஷன் கடைக்கு பொருள் வாங்க சென்றனர். முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி மக்கள் கும்பலாக இருந்தனர்.''அரசாங்கம் எவ்ளோ சொன்னாலும், யாரும் கேக்கறதே இல்லை,'' என புலம்பியவாறே, அருகிலிருந்த மர நிழலுக்கு சென்றாள்.''அக்கா... மூன்றாவது அலை வருது சொல்றாங்க. எந்த அலை வந்தாலும், சிலர் இப்டித்தான் இருக்காங்க,'' என்ற மித்ரா,
 பால் பூத்தில் 'சரக்கு' கிடைக்குது... போலீசின் பாக்கெட் நிரம்புது!

சித்ராவும், மித்ராவும் அருகிலிருந்த ரேஷன் கடைக்கு பொருள் வாங்க சென்றனர். முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி மக்கள் கும்பலாக இருந்தனர்.

''அரசாங்கம் எவ்ளோ சொன்னாலும், யாரும் கேக்கறதே இல்லை,'' என புலம்பியவாறே, அருகிலிருந்த மர நிழலுக்கு சென்றாள்.

''அக்கா... மூன்றாவது அலை வருது சொல்றாங்க. எந்த அலை வந்தாலும், சிலர் இப்டித்தான் இருக்காங்க,'' என்ற மித்ரா, ''பொதுமக்கள் சிலரு, ரேஷன் அரிசியை வாங்கி, கிலோ, 10 ரூபாய்க்கு, வட மாநில இளைஞர்களுக்கு விக்கறாங்க,''

''இதில, நல்ல வருமானம் கிடைக்கிறதால, சிலரு தொழிலாவே மாத்திக்கிட்டாங்க. அரிசியை மொத்தமா வாங்கிட்டு வந்து, வட மாநில இளைஞர்கள் தங்கியிருக்கும் விடுதி, மில், வணிக நிறுவனங்களில் இருக்கற கேன்டீன்களுக்கு சப்ளை பண்றாங்களாம்,'' என்றாள்.

''இந்த விஷயம் அதிகாரிகளுக்கு தெரியாதா?''

''பல பகுதியில இருந்து மூட்டை, மூட்டையா ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துட்டுதான் இருக்காங்க. ஆனா அந்த அரிசி, எங்கிருந்து வந்துச்சு, எங்கெல்லாம் கொண்டு போய் தர்றாங்கன்னு விசாரிக்கிறதே இல்லையாம். இந்த விஷயத்த கண்டுக்காம விடுங்கன்னு ஆளுங்கட்சியிலிருந்து வி.ஐ.பி.,ங்க சிலரு, அழுத்தம் கொடுக்கறாங்களாம்...'' என்றாள் மித்ரா.


வீடு ஒதுக்க குழப்பம்''எதுக்கெல்லாம் ரெகமண்டேசன் பண்றதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போச்சு...'' என்ற சித்ரா, ''மித்து, வாடி கூட்டம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு,'' என்றவாறே கடைக்குள் சென்று பொருள் வாங்கி வந்தாள்.

வீட்டுக்கு வந்த இருவரும் சோபாவில் அமர, ''அக்கா என் பிரண்டுக்கு தெரிஞ்சவங்க, ஏழ்மை நிலையில இருக்காங்களாம். குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில வீடு வாங்குறதுக்கு நடைமுறை என்னன்னு விசாரிக்க சொன்னாங்க,'' என்றாள் மித்ரா.

''மித்து, இந்த விவகாரம், பெரிய குழப்பமா இருக்குடி. திருப்பூர், பூண்டி, அவிநாசியில வீடுகள் தயாரா இருக்கு. போனமுறை ஆட்சில இருந்தவங்க ரெகமண்டேசனில் பயனாளிங்க பட்டியலை தேர்வு செஞ்சிட்டாங்க,''

''மாற்றுத்திறனாளிங்க, ஆதரவற்ற விதவைகளுக்கு வீடு தர்றதுக்காக, நம்ம கலெக்டர் சிறப்பு முகாம் ஏற்பாடு பண்ணிருக்காரு. இதனால, கண்டிப்பா வீடு கெடைக்கும்னு நெனச்சவங்க, கலெக்டர்கிட்ட புகார் கொடுக்க ரெடியாயிட்டாங்க...''

''கரெக்ட்க்கா. அவர்கிட்ட கொடுத்தாதான் சரியா வரும்,'' கூறிய மித்ரா, ''அனுப்பர்பாளையம் லிமிட்டில், டூவீலர் மேல சரக்கு வாகனம் மோதிடுச்சு. 'பார்மால்ட்டி' முடிஞ்ச பின்னாடியும், சரக்கு வாகனத்தை ரிலீஸ் பண்ணாம, 'இன்னும் கொஞ்சம்' எதிர்பார்த்து, நிறுத்தி வச்சிட்டாங்க...'' என போலீஸ் மேட்டர் கூறினாள்.

தொடர்ந்து அவளே ''இந்த விஷயம், ஆபீசர் கவனத்துக்கு போனதால, வண்டியை விடச்சொல்லி, ஸ்டேஷன் அதிகாரியை கூப்பிட்டு, செம 'டோஸ்' விட்டார்.

இப்படியே இருந்தீங்கன்னா ஏ.ஆருக்கு மாத்திடுவேன்னும் சொன்னதும் அதிகாரி வெலவெலத்து போயிட்டாராம்,''


போட்டாபோட்டி''ம்ம்ம்... டிரான்ஸ்பர் போட்டா, நம்ம ''ஆனந்தம்' போயிடும்னு கவலைப் படறாராம். தயாராகி வரும் டிரான்ஸ்பர் லிஸ்டில், பலருக்கும் கேட்ட இடம் கிடைக்க போகுதாம். இதுல, வருமானம் கொழிக்கிற மதுவிலக்கு பிரிவு தான் வேணும்னு, சிலரு ஆர்வம் காட்றாங்களாம்,''

''இருக்காதா பின்னே? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், 'இல்லீகல்' சமாசாரங்கள் நடந்துட்டு தான் இருக்கு. இப்ப பாரு, பல்லடத்துல, இலைக்கட்சிக்காரர் பேர்ல இருக்க 'ஆவின்' பூத்ல, 'சரக்கு' பதுக்கி வித்திருக்காங்க. தகவல் தெரிஞ்சு போன போலீஸ், 'பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கங்கிற' கதையா, கடை ஓனரை விட்டுட்டு, வேல பார்த்துட்டு இருந்தவரு மேல கேஸ் போட்டுட்டாங்க...

''அப்போது, வீட்டுக்கதவு தட்டும் சத்தம் கேட்டு, வெளியே போன சித்ராவிடம், ''அக்கா இங்கே 'ராமமூர்த்தி'ன்னு யாராவது இருக்காங்களா?'' என கூரியர் பாய் கேட்க,''நாலு வீடு தள்ளி கேளுப்பா'' என, வழி சொல்லி உள்ளே வந்தாள்.


வசூலில் கெட்டி''அதே மாதிரிங்க்கா... திருப்பூர் போஸ்ட் ஆபீஸ் பக்கத்துல அரிசி லோடு வேன் 'பிரேக் டவுன்' ஆகி நின்னதால, 'டிராபிக்' ஆகியிருக்கு. வேனை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் நிறுத்தின, வடக்கு டிராபிக் போலீஸ்காரங்க, 'கணிசமா' வாங்கிட்டு, அனுப்பிட்டாங்க...''

''அதோடில்லாம, ஏர்லி மார்னிங்கில, பி.என்., ரோட்ல இருக்க, 'செக்போஸ்ட்'ல நின்னுகிட்டு, வர்ற லாரி டிரைவர்ங்ககிட்ட வசூல் அள்றாங்களாம். அவங்ளோட 'திறமை'யை பார்த்து, 'எல் அண்ட் ஓ' போலீஸ் மிரண்டு போய்ட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.

''பெரிய அதிகாரி எவ்வளவு தான் கண்டிப்பு காட்டினாலும், பல பேரு தங்களோட போக்கை மாத்திக்கவே மாட்டேங்கறாங்க'' என சலித்து கொண்டாள் சித்ரா.

''எங்கீங்க்கா...?''


கில்லாடி போலீஸ்''தாராபுரம் ஸ்டேஷன் குட்டி ஆபீசர், 'சிவில்' வழக்குல கட்டப்பஞ்சாயத்து செய்ய போய், அவர் மேல திண்டுக்கல் பக்கத்தில உள்ள ஒரு ஸ்டேஷன்ல, எப்.ஐ.ஆர்., போட்டுட்டாங்க. உடனே, அவரும் மெடிக்கல் லீவு போட்டு, எஸ்கேப் ஆயிட்டார். புது எஸ்.பி., வந்ததும், சத்தமில்லா, அதே ஸ்டேஷனில் 'ஜாயின்ட்' பண்ணிட்டாரு. இத யாருமே கண்டுக்கலையாம்...'' என்றாள் சித்ரா.

சித்ராவின் மொபைல் போன் சிணுங்க, ''யாரு, 'ரமேஷ்' அண்ணாவா. நல்லா இருக்கீங்களா?'' எனக்கூறி, ஒரு நிமிடம் பேசி, இணைப்பை துண்டித்து, ''பல்லடம் ரெவின்யூ ஆபீசில, ஒரே மாசத்துல நாலு பேர் ஊழல் புகார்ல சிக்கி, 'அரெஸ்ட்' ஆனாங்க. அதுல, 'நிலக்கரி' திருடினவங்கதான் சிக்கியிருக்காங்க... இன்ஜினை எடுத்தவங்க, இன்னும் கல்லா கட்டிட்டு, 'தில்'லா வேலை பார்த்துட்டு தான் இருக்கங்களாம்,'' என்றாள்.

''அதே ஊரில, இருக்கற ஜி.எச்.,க்கு போனா, யாரும் கண்டுக்கறதே இல்லையாம். அதிலும் 'நைட் டூட்டி' பார்க்கற டாக்டர் துாங்கிடறாராம். 'பேஷன்ட்ஸ்' யாராச்சும் வந்தா, நர்ஸ்களே ஊசி போட்டு அனுப்பிடுவாங்களாம். அதிலயும், ஆஸ்பத்திரி முழுக்க சுத்திகிட்டு இருக்கற நாய்கள் கிட்ட கடி வாங்கிட்டு வர்றது தான் மிச்சம்னு, 'பேஷன்ட்ஸ்' புலம்பறாங்க''

''அட, நீ ஒன்னு. இங்க மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்யே பிரச்னை ஓடுது. இவங்க எங்க பல்லடத்தை கண்டுக்க போறாங்க,'' சிரித்த சித்ரா, ''அவிநாசி தாலுகா ஆபீசில், பட்டா மாறுதல் விண்ணப்பம் குடுத்தவங்க, தவியாய் தவிக்கிறாங்களம்,'' என்றாள்.

''என்ன பிரச்னைக்கா...?''

''ஏதோ ஒரு காரணத்தை சொல்லி, ரிஜெக்ட் பண்றாங்களாம். ஆனா, புரோக்கர்களுக்கு, காலையில குடுத்த அன்னைக்கு சாயந்திரமே ஆர்டர் கிடைச்சுடுதாம்,''''அக்கா, பணம் பத்தும் செய்யும்...'' சிரித்த மித்ராவிடம், ''ஓ.கே.., மித்து. நான் கிளம்பறேன்.

'கீர்த்தி பிரபா' வந்தாங்கன்னா, நான் கேட்டேன்னு சொல்லு,'' என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X