உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டின் மானத்தை காப்பாற்றி இருப்போர், வடமாநிலத்தோர் தான். ஒலிம்பிக் போட்டியில் தமிழர்கள் சாதிக்காதது குறித்து யாரும் வருத்தப்படுவது போல தெரியவில்லை.
கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைத்து விடும். விளையாட்டில் அது முடியாதே... இதில் திறமையிருந்தால் தான் வெற்றி பெற முடியும்!திறமைசாலியை இனம் கண்டு ஊக்குவிக்க, திராவிட கட்சிகளின் அரசுகள் முன்வருவதில்லை; அதனால் தமிழர்கள், விளையாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை.பெற்றோரும் தம் பிள்ளை டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் ஆக வேண்டும் என நினைக்கின்றனரே தவிர, சிறந்த விளையாட்டு வீரராக வர வேண்டும் என விரும்புவதில்லை.

நம் நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் தான் புகழின் வெளிச்சத்தில் இருக்கின்றனர்; செல்வத்தில் கொழிக்கின்றனர். மற்ற விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை நாம் கண்டுகொள்வதே இல்லை.உயரம் தாண்டுதல், கால் பந்து, நீச்சல், தடகளம் உள்ளிட்டவற்றை பிரபலப்படுத்தாமல், தகுதியான வீரர்களை ஊக்கப்படுத்தாமல், ஒலிம்பிக் விளையாட்டில் தமிழர்கள் சாதிப்பர் என நினைப்பது மூடத்தனம்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் வீரருக்கு 3 கோடி ரூபாய் என்ன, 300 கோடி ரூபாய் பரிசு தருவோம் என, முதல்வர் ஸ்டாலின் சொன்னாலும், தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதே நிஜம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE