பொது செய்தி

தமிழ்நாடு

மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; சேகர்பாபு

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (129)
Share
Advertisement
சென்னை: கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ள யாரையும் வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை, சட்டமீறல் ஏதும் இல்லை , மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யாரும் முன்னுக்கு
கோயில், அமைச்சர், சேகர்பாபு, அர்ச்சகர்,

சென்னை: கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ள யாரையும் வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை, சட்டமீறல் ஏதும் இல்லை , மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யாரும் முன்னுக்கு வரக்கூடாது என சிலர் விஷமதனமாக பிரசாரம் செய்கின்றனர். ஏற்கனவே கோயில்களில், அர்ச்சகராக உள்ள யாரையும் வெளியேற்றும் திட்டமில்லை. எந்த கோயிலிலும் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை.

பல ஆண்டுகள் பணிபுரிந்து, வயது மூப்பிற்கு பிறகும், பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வெளியேற்றப்படவில்லை. தொடர்ந்து பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எந்த தவறுக்கும் இடம் தர மாட்டோம். 58 பேர் நியமனம் காரணமாக யாரும் பணி இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப்பணி தரப்படும்.


சுப்பிரமணியசுவாமிக்கு பதில்



கடும் விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டியது இருக்கும் என சுப்பிரமணியசுவாமி எச்சரித்துள்ளாரே என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் வருமாறு:


latest tamil news



கடந்த 10 ஆண்டுகளாக அர்ச்சகர்களாக யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய பணி நியமனம் செய்யப்படவில்லை. 1954 சட்டப்படி பரம்பரை அர்ச்சகரை மாற்றலாம் என உள்ளது . சில ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்கிறது. எந்த மிரட்டலுக்கும் திமுக அரசு அஞ்சாது. விதிமீறலை சுட்டிக்காட்டினால் திருத்தி கொள்வோம். அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவுதர வேண்டும். கருணாநிதி தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அது தவறு என்றால், அந்த தவறை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் செய்வார். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
23-ஆக-202108:50:19 IST Report Abuse
sankar நாய் வாலாய் நிமிர்த்த முடியுமா
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஆக-202105:59:59 IST Report Abuse
meenakshisundaram மரத்தின் கிளையை அதன் மேல் நின்றுகொண்டே வெட்டும் வேலை இவர் ஸ்டாலினுக்காக செய்கிறார் . இளம் வயதில் தார் சட்டியை தூக்கிய தமிழன் கடைசி காலத்தில் மூத்திர சட்டியை தூக்கிக்கொண்டு அலைந்தான் என்பதே வரலாறு.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
22-ஆக-202119:18:59 IST Report Abuse
dina SEKARBABU எந்த கம்யூனி(ஸ்) ட்யை சார்ந்தவர் என்று தெரியவில்லை, இவர் செய்யும் கோமாளித்தனங்கள் ஸ்டாலினிக்கு பெரிய ஆப்பு இவர்கள் மஸ்ஜித்லோ சர்ச்சீலோ ஒரு முள்ளவையோ ஒரு பத்திரியரியோ நியமிக்கமுடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X