கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (94)
Share
Advertisement
சென்னை: வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரிய நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே, இரு நடிகர்கள் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தசோதனைக்கு பிறகு, 2007- 08, 2008-09
வரிவிலக்கு, சூர்யா, சென்னை உயர்நீதிமன்றம், ஐகோர்ட், உயர்நீதிமன்றம்

சென்னை: வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரிய நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே, இரு நடிகர்கள் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தசோதனைக்கு பிறகு, 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை கூறியது. இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் சூர்யா தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.


latest tamil news



இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி நிர்ணயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்தால், அதற்கான வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியதாவது: வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்எம் சுப்ரமணியன் சூர்யா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
21-ஆக-202111:45:38 IST Report Abuse
venkates un துணைவியரிடம் கேளு? கட்ட சொல்லும்
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
20-ஆக-202108:38:47 IST Report Abuse
Sankare Eswar இப்படி பிட்சை எடுக்க கொஞ்சன் கூட வெக்கமா இருகாதா?
Rate this:
Cancel
18-ஆக-202107:59:53 IST Report Abuse
ராஜா தஞ்சாவூர் ஆஸ்பத்திரியை பார்த்து விட்டு வந்ததில் இருந்து வீட்டில் வெறும் பழயசோறும் வெங்காயமும் தான். இந்த சொகுசு கார் கூட வாசலில் இருக்கும் காவலருக்குத்தான். அறக்கட்டளை என்னும் பெயரில் மிசனரிகளிடம் பாஜக வுக்கு எதிராக பேச காசு வாங்கி நிஜ வாழ்விலும் நடித்துக்கொண்டு இருக்கும் கூட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X