புனரமைக்கப்படும் ஹூமாயூன் மகாலின் கதை

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021
Share
Advertisement
இந்தியாவின் முதல் சாராசெனிக் கட்டடம்என்ற பெருயைக் கொண்ட சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ‛ஹீமாயூன்' மகால் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 1690 முதல் 1801 வரை தென்னிந்திய பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆற்காடு நவாப்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததால் ஆற்காடு நவாப்கள் என்றழைக்கப்பட்டனர்.1749-1795 ம்latest tamil news


இந்தியாவின் முதல் சாராசெனிக் கட்டடம்என்ற பெருயைக் கொண்ட சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ‛ஹீமாயூன்' மகால் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


latest tamil news


1690 முதல் 1801 வரை தென்னிந்திய பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆற்காடு நவாப்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததால் ஆற்காடு நவாப்கள் என்றழைக்கப்பட்டனர்.1749-1795 ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மூன்றாவது நவாப்பான முகமது அலி கான் வாலாஜாவிற்கு சென்னையில் ஒரு தங்ககம் தேவைப்பட்டது.


latest tamil news


Advertisement

அன்றைக்கு பிரபலமாக விளங்கிய கட்டடக்கலை நிபுணரும் ஆங்கில பொறியாளருமான பால் பென்பீல்டு என்பவர் நவாப்பிற்கான சென்னை அலுவலக கட்டடத்ததை அரண்மனை போல வடிவமைத்து கட்டிக்கொடுத்தார், இதற்காக இவர் நான்கு ஆண்டு காலம் எடுத்துக் கொண்டார்.


latest tamil news


13 பெரிய ஹால்களும்,நான்கு வராண்டாக்களும்,உயரமான ஜன்னல்களும் மேற்கூரைகளும் என கொண்டு முகாலய பாணியில் அமைக்கப்பட்ட இந்த கட்டடம் மூன்றாம் முகாலயப் பேரரசர் ஹூமாயூன் நினைவாக ‛ஹூமாயூன் மகால்' என்றழைக்கப்பட்டது.
இந்தக் கட்டடத்தின் செங்கல் மற்றும் சுண்ணாம்பு பூச்சின் சிறப்புத்தன்மை காரணமாக கோடையிலும் கட்டிடத்திற்குள் குளிர்தன்மை நிலவும்.சுதந்திர இந்தியாவில் இந்த கட்டிடம் அரசு அலுவலமாக பயன்படுத்தப்பட்டது.வேளாண்மைதுறை,கைவிரல் ரேகை பிரிவு,அச்சக பிரிவு,சமூக நலத்துறை உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இந்த கட்டடத்தில் இயங்கின.


latest tamil news


கட்டிடத்தின் வயது முதிர்வு காரணமாக ஆங்காங்கே சுவர்களும் மேற்கூரைகளும் இடிந்து விழுந்ததன அரசு அலுவலகங்கள் இடத்தைக் காலி செய்து வேறு இடத்திற்கு சென்றன.நீண்ட காலம் பூட்டியே கிடந்தததால் செடி கொடிகள் வளர்ந்து கட்டடம் புதர்மண்டிப் போனது.


latest tamil news


பாழடைந்த இந்த கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு அரசு அலுவலகத்திற்கு தேவையான புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.இது போன்ற பழமையான பராம்பரிய பெருமை கொண்ட கட்டடங்களை இடிக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் காரணமாக இடிப்பது தவிர்க்கப்பட்டு பழமை மாறாமல் புனரமைக்க அரசு முடிவு செய்தது.
இதற்காக பல்துறை அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டட பாதுகாப்பு சிறப்பு பிரிவிடம் கட்டட சீரமைப்பு பணி ஒப்படைக்கப்பட்டு சுமார்34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துவரும் சீரமைப்பு பணி தற்போது எண்பது சதவீதத்தை எட்டியுள்ளது.
254 வருடங்கள் பழமையான இந்த கட்டடத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் பொதுப்பணித்துறை பிரிவினர் சீரமைத்து வருகின்றனர்.


latest tamil news


254 வருடங்களுக்கு முன்பாக ஜன்னல்,கதவு,நிலை,உத்திரம், சுவர்கள் எல்லாம் எப்படி இருந்ததோ அப்படியே வடிவமைக்கின்றனர்.குறிப்பாக ‛மெட்ராஸ் டெரஸ் ரூப்' எனப்படும் வித்தியாசமான செங்கல் கூரைப்பகுதியைக்கூட அப்படியே உருவாக்கியுள்ளனர். இதற்கான தொழில்நுட்பத்தையும் தொழில் நுட்ப கலைஞர்களையும் தேடிக்கண்டுபிடித்து ஈடுபடுத்திவருகின்றனர். சிமிண்டை தவிர்த்து அந்தக்காலம் போல சுண்ணாம்பு பூச்சை பயன்படுத்துகிறோம்.
இந்த கட்டிடம் முழுமை பெறும் போது ‛ஹீமாயூன் மகால்' புதிதாக கட்டியது போலவே இருக்கும், இன்னும் ஒரு நுாற்றாண்டிற்கு இந்த கட்டிடம் அதன் பெருமை பேசி நிற்கும், நிலைக்கும் என்றார் தமிழக அரசின் பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் கே.பி.சத்யமூர்த்தி.
பழமையான கட்டடங்கள் எதைப்பார்த்தாலும் அதில் சிமிண்டிற்கு பதிலாக சுண்ணாம்பு பூச்சு இருப்பதைக் காணலாம்.பல ஆண்டுகளுக்கு முன்பு காளை மாடுகள் உதவியுடன் ரோதைக்கல் பயன்படுத்தி சுண்ணாம்பு கலவை அரைக்கப்பட்டது. இந்தக் கலவையை சுண்ணாம்பு ரோதை என்பர். இந்த முறையில் தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவையில் கடுக்காய், வெல்லம், நாட்டுக் கோழி முட்டை, சோற்றுக்கற்றாழை போட்டு பதினைந்து நாட்கள் ஊற வைத்து அதன்பிறகு பூச்சுக்கும், மேற்கூரை போடுவதற்கும் பயன்படுத்துவர்.
இது போன்று தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவை 100 சதவீதம் தரமானதானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும், பொதுப்பணித்துறை பாரம்பரிய கட்டட கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம் கூறுகையில் இதற்காக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து ரோதைக்கல்லும்,மாடு சுற்றும் வட்டத்தில் வைக்கப்பட்ட கருங்கற்கள் மகாபலிபுரத்தில் இருந்தும், இப்பணிக்கென்று பழக்கப்பட்ட காங்கேயம் காளைகள் கோவில்பட்டியில் இருந்தும் கொண்டு வரப்பட்டது. ஒரு நாளைக்கு 5 மூட்டை சுண்ணாம்பு கலவை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.இவ்வாறு தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க சுண்ணாம்பு கலவை பூச்சு முறை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக ஹூமாயூன் மகால் புனரமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X