காபூலுக்குள் புகுந்த மற்ற பயங்கரவாத குழுக்கள்: தலிபான்களுக்கு தலைவலி

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (38) | |
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு ஊடுருவியுள்ள மற்ற பயங்கரவாத அமைப்புகளால் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களுக்குள் தலிபான்கள் போல் வெள்ளைக் கொடியுடன், இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.,), ஜெய்ஷ் இ - முகமது (ஜே.எம்.,) மற்றும் லஷ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட மற்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த சில

காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு ஊடுருவியுள்ள மற்ற பயங்கரவாத அமைப்புகளால் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



latest tamil news



ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களுக்குள் தலிபான்கள் போல் வெள்ளைக் கொடியுடன், இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.,), ஜெய்ஷ் இ - முகமது (ஜே.எம்.,) மற்றும் லஷ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட மற்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களில் நுழைந்துள்ளனர்.

இவர்கள் தலிபான் தலைமையின் உத்தரவை மீறி தாங்களாகவே செயல்பட்டு வருகின்றனர். இது, நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு, காபூலின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் சவாலாக மாறக்கூடும். இதனால் இந்த பயங்கரவாத குழுக்களுக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படவும் வன்முறைகள் வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


latest tamil news



இந்நிலையில், மற்ற பயங்கரவாதக் குழுக்களை காபூலை விட்டு வெளியேறுமாறு தலிபான்கள் கூறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆப்கானுக்குள் ஐ.எஸ்., உள்ளிட்ட மற்ற பயங்கரவாத அமைப்புகளை தலிபான்களை தலையெடுக்க விடாமல் தடுப்பார்களா என, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
22-ஆக-202115:32:22 IST Report Abuse
suresh kumar இலங்கையில் எப்படி பல தமிழ் குழுக்களுக்கும் போட்டி ஏற்பட்டு ஒருவரையொருவர் அழித்துக் கொண்டார்களோ, அப்படித்தான் இங்கும் நடக்கும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஆக-202104:07:33 IST Report Abuse
meenakshisundaram நமக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது நயினா எல்லா பயல்களுமே தாடி வச்சிக்கிருக்கானுவ .தலைப்பா கட்டியிருக்காண்ணுவ ,எவன் தீவிரவாடின்னு கண்டு பிடிக்கிறானுவ ?ஏதாவது அடையாள அட்டை வச்சிருப்பாங்களோ ?ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் .உலகெங்கும் மொத்தமா இவிங்களை அடையாளம் கண்டுக்கின்னானுவ
Rate this:
Cancel
18-ஆக-202101:59:39 IST Report Abuse
அப்புசாமி அமெரிக்கா இந்த புது க்ரூப்புகளுக்கு ஆதரவு குடுத்தா, ஒருத்தரை ஒருத்தர் அடிச்சக்குட்டு சாவாங்க. மூர்க்கரை மூர்க்கரால்தான் வெல்ல முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X