அரசியல் செய்தி

தமிழ்நாடு

உண்மையான சமூக நீதியை பா.ஜ.,வில் பார்க்கலாம்: அண்ணாமலை

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
திருப்பூர்: திமுக.,வினர் பொய்யான சமூக நீதியைப் பரப்புவதாகவும், உண்மையான சமூக நீதியை பா.ஜ.,வில் பார்க்கலாம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பா.ஜ., முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ‛மக்கள் ஆசி யாத்திரை'யை நேற்று (ஆக.,16) கோவையில் துவக்கினர். இதன் தொடர்ச்சியாக 2வது நாளான இன்று திருப்பூர்
Tamilnadu, BJP, Annamalai, தமிழகம், பாஜக, சமூகநீதி, அண்ணாமலை

திருப்பூர்: திமுக.,வினர் பொய்யான சமூக நீதியைப் பரப்புவதாகவும், உண்மையான சமூக நீதியை பா.ஜ.,வில் பார்க்கலாம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பா.ஜ., முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ‛மக்கள் ஆசி யாத்திரை'யை நேற்று (ஆக.,16) கோவையில் துவக்கினர். இதன் தொடர்ச்சியாக 2வது நாளான இன்று திருப்பூர் மாவட்டத்தில் யாத்திரையை துவக்கினர். யாத்திரையில் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛திமுக.,வினர் பொய்யான சமூக நீதியைப் பரப்புகின்றனர். உண்மையான சமூக நீதியை பா.ஜ.,வில் பார்க்கலாம்,' எனக் கூறினார்.


latest tamil news


தொடர்ந்து, காங்கேயம் பகுதிக்கு மதியம் 1 மணியளவில் வந்த முருகனுக்கு பஸ்நிலையம் ரவுண்டான பகுதியில் சிறுமிகள் பாரத மாத வேடம் அணிந்தும், காங்கேயம் காளைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அண்ணாமலை பேசியதாவது: இது ஒரு சாதாரண யாத்திரை கிடையாது, உங்களுடைய அன்பையும் நன்மதிப்பையும், ஆசீர்வாதத்தையும் பெருவதற்காக அமைச்சர் இங்கு வந்திருக்கிறார். உங்ளுக்கு தெரியும் மத்திய இணை அமைச்சர் என்பது சாதாரண பொறுப்பு கிடையாது. 8.5 கோடி தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதி, நேரடியாக நம்முடைய பிரதமர் நரேத்திரமோடிக்கும், தமிழக மக்களுக்கும் பாலமாக இருக்க போகிறார்.


latest tamil news


நான்கு துறைகள், அதிலும் மிக முக்கியமாக நம்முடைய பால்வளத்துறை, மீன்வளத்துறை அனைத்தும் கூட நம்முடைய மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கிறது. குறிப்பாக நம்முடைய காங்கேயம் பகுதி கொங்கு மக்களுக்கு அவருடைய சேவை நிச்சயம் தேவை. அதனால் உங்கள் ஆசீர்வாதத்தையும், வாழ்த்துகளையும் தந்து அவருடைய பணி சிறக்க வேண்டும் என வாழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கூட்டத்துக்கு ரூ.150, மதிய உணவு


மத்திய அமைச்சரையும், மாநில தலைவரையும் வரவேற்க்க, பொதுமக்களுக்கு ரூ.150 தந்து இரண்டு வேன்களில், கட்சி நிர்வாகிகள் அழைத்து வந்தனர். கட்சி தொண்டர்கள் குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டதால் கூட்டம் எதிர்பார்த்த அளவில் இல்லை. அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகி தோட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.


வரவேற்பில் கலந்து கொண்ட வெள்ளகோவில் அதிமுக சேர்மன்


மத்திய அமைச்சர் மற்றும் மாநில தலைவரை வரவேற்க்கும் நிகழ்வில், வெள்ளகோவில் யூனியன் அதிமுக சேர்மன் சுதர்சன் வெங்கடேசன் கலந்து கொண்டார். கூட்டணி கட்சியாக அதிமுக இருந்தாலும் வேறு எந்த நிர்வாகியும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. சுதர்சன் வெங்கடேசன் மட்டும் கலந்து கொண்டது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு யூககங்களை எழுப்பியுள்ளது.



அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டரில் கூறியுள்ளதாவது


Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - coimbatore,இந்தியா
18-ஆக-202108:25:21 IST Report Abuse
ravi நான்கு துறைகள், அதிலும் மிக முக்கியமாக நம்முடைய பால்வளத்துறை, மீன்வளத்துறை அனைத்தும் கூட நம்முடைய மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கிறது. உங்கள் கையில் இருந்தால் என்னவேனாலும் பண்ணலாம் என்று சொல்கிறாயா ?? அது மட்டும் நடக்காது அண்ணாமலை.. தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு ஒட்டு போடமாட்டார்கள் ... வெயிட் அண்ட் வாட்ச் ....
Rate this:
Cancel
ravi - coimbatore,இந்தியா
18-ஆக-202108:20:18 IST Report Abuse
ravi இது இ வே ரா, அண்ணா , கலைஞர் வாழ்ந்த மண்ணு ... தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகவே வேகாது... தமிழ்நாடு மக்கள் அதி புத்திசாலிகள்... இது வட இந்தியா இல்லை அண்ணாமலை... தமிழ்நாடு தமிழ்நாடு
Rate this:
Cancel
ஹாதீஸ் - தூத்துக்குடி,இந்தியா
18-ஆக-202104:33:26 IST Report Abuse
ஹாதீஸ் பாப்போம் திரு அண்ணாமலை அவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X