சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமைச்சரானதை பொறுக்க முடியாத எதிர்கட்சிகள்: எல்.முருகன்

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (29)
Advertisement
காங்கேயம்: சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர் ஆனதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகள் பார்லியில் அமளியில் ஈடுபட்டதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.பாஜக முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ‛மக்கள் ஆசி யாத்திரை'யை நேற்று (ஆக.,16) கோவையில் துவக்கினர். இதன் தொடர்ச்சியாக
BJP, Minister, Murugan, Tamilnadu, பாஜக, இணை அமைச்சர், முருகன், தமிழகம், சாதாரண குடும்பம், எதிர்க்கட்சிகள்

காங்கேயம்: சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர் ஆனதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகள் பார்லியில் அமளியில் ஈடுபட்டதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.பாஜக முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ‛மக்கள் ஆசி யாத்திரை'யை நேற்று (ஆக.,16) கோவையில் துவக்கினர். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இன்று யாத்திரை மேற்கொண்டனர். காங்கேயம் பஸ்நிலையம் முன்பு நடைபெற்ற கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: தமிழகத்தின் பிரதிநிதியாக தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக ஆன பிறகு மக்களிடத்தில் ஆசி வாங்கவேண்டும் என்பதற்காக இன்று உங்களை சந்தித்திருக்கிறோம்.


latest tamil newsநம்முடைய பிரதமர் 43 புதிய அமைச்சர்களை நியமித்த பிறகு அவர்களை பார்லிமென்டில் அறிமுகம் செய்து வைப்பது மரபு. ஆனால் இந்த 43 அமைச்சர்களும், அறிமுகம் செய்து வைக்காமல், எதிர்கட்சிகள், பார்லி.,யில் குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவாக அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை. இந்த 43 அமைச்சர்களும் சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் 12 பேர், மலைவாழ் மக்கள் 8 பேர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் 28 பேர் அமைச்சர்களாக உள்ளார்கள்.


latest tamil newsஇதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள் திட்டமிட்டு அங்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அதனால் தான் மக்களிடத்தில் சென்று மக்களை சந்தித்து ஆசி வாங்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. அதில் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக அமைச்சர் ஆக வேண்டும் என்றால் முதலில் எம்.பி.,யாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லை. அல்லது ராஜ்ய சபாவிலாவது எம்.பி.,யாக இருக்கவேண்டும், அந்த எம்.பி.,யும் இல்லை. அப்படி எம்.பி., இல்லாத ஒருவரை முதல் முறையாக, பட்டியல் இனத்தை சார்ந்த ஒருவரை அமைச்சராக்கி இருக்கிறார் பிரதமர் மோடி.

மத்திய அரசின் செயல் திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காக, நாம் மக்கள் மத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கும் பிரதமர் மோடிக்கு உங்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
18-ஆக-202109:50:25 IST Report Abuse
Ramu விவாதத்தை எதிர்கொள்ள இயலவில்லை என்றால், தான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலேயே பொறாமையில் எதிப்பதாக கூக்குரலிடுவது பார்க்க சகிக்கவில்லை. மோடி ராஜ்யத்தில், அமைச்சர்கள் யாரும் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. அந்த வகையில், இந்த பதவியால் முருகனுக்கு அல்லது தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
18-ஆக-202112:09:45 IST Report Abuse
HSRஉன் டும்மீல் நாட்டு அமச்சினனுங்க மட்டும் பிரஜோணமா? சொத்து சேக்கரதுல மட்டும் குறியா இருப்பானுக.. போவியா...
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
18-ஆக-202107:49:21 IST Report Abuse
Naresh Giridhar அது என்ன சாதாரண குடும்பம்? சாதாரண குடும்பம், அசாதாரண குடும்பம் என்று இருக்கிறதோ? முருகன் சார் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் உறவினர் உங்களுக்கு ஆசி கொடுக்க ஆவலுடன் இருக்கிறார்கள். தயவு செய்து வந்து போகவும்.
Rate this:
Cancel
jeeva -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-202104:49:53 IST Report Abuse
jeeva Same vadai like Modi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X