ஆப்கானிஸ்தான் நிலவரம்: ஜெய்சங்கர் ஆலோசனை

Added : ஆக 17, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டவர் வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.கடும் கூட்ட நெரிசல், அமளியைத்

வாஷிங்டன்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டவர் வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.கடும் கூட்ட நெரிசல், அமளியைத் தொடர்ந்து, தனியார் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கவுன்சிலின் இந்த மாதத் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னை அவர் சந்தித்து பேசினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சூழ்நிலை குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் குறித்து அவர் விவாதித்துள்ளார்.


எச்சரிக்கையில் தளர்வு



'கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததால் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என, தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா எச்சரித்திருந்தது. இதற்காக இந்தாண்டு துவக்கத்தில் நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி பயணம் மேற்கொள்வது ஆபத்து என, தெரிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த எச்சரிக்கையை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இரண்டாம் நிலை எனப்படும் மிதமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பயணம் மேற்கொள்வதில் ஆபத்து இல்லை என, புதிய எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X