குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (42)
Advertisement
சென்னை :குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை மற்றும் வீடுகளில், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.தமிழக மின் வாரியம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும்; மற்ற அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது.
குடும்ப தலைவி,ரூ.1,000:  யாருக்கு , கிடைக்கும்?

சென்னை :குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை மற்றும் வீடுகளில், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மின் வாரியம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும்; மற்ற அனைத்து வீடுகளுக்கும், 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. இதற்காக ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.தற்போது, 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர, 2.12 கோடி வீட்டு இணைப்புகளில், 100 யூனிட் வரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 73 லட்சம் என்றளவில் உள்ளது.சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி, எதிர்க்கட்சிகள், அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதனால், அத்திட்டத்திற்கான பயனாளிகளை அடையாளம் காண்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வசதி படைத்த பலர், அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளனர். ரேஷன் கார்டை மட்டும் அடிப்படையாக வைத்து, உரிமை தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய முடியாது. பயனாளிகளை அடையாளம் காண்பதில், பல அம்சங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது. இதனால், இரு மாதங்களுக்கும் சேர்த்து, 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர், அதிக வருவாய் ஈட்ட வாய்ப்பில்லை.எனவே, உரிமை தொகை வழங்குவதற்கான மொத்த பயனாளிகளில், குடிசை மற்றும், 100 யூனிட்டுக்கு கீழ், மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
22-ஆக-202121:59:32 IST Report Abuse
Ramarao Ramanaidu அப்போ நாலு பொண்டாட்டிகளுக்கும் கிடைக்குமா?
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
19-ஆக-202113:19:10 IST Report Abuse
periasamy தகுதியான நபர்களுக்கு ஆயிரம் கொடுத்தால் போதும் அரிசி அட்டை நிறைய வசதி படைத்தவர்கள் தொழில் மற்றும் வெளி நாடுகளில் லட்சங்களில் சம்பளம் பெறுவர்களும் வைத்துள்ளார்கள் எனவே உண்மையான பயனாளிகளுக்கு கொடுத்தால் போதும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஆக-202104:47:17 IST Report Abuse
meenakshisundaram பேசாமே 'குடும்ப தலைவின்னு 'சொல்லாமே 'விதவைகளுக்கு என்று மனதில் வைத்து சொல்லி இருப்பாரோ என்ற சந்தேகம் வருது .ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் .அவர் தேதி சொல்லவில்லை .அதே போல 'அக்கா ' கனியும் சொன்னார் (இப்ப ஆளையே காணோமே மாதவா )-நாங்கள் ஆட்சிக்கு வநதாள் திமுக காரங்க நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்.அப்பா எவனாவது கேட்டானஎ ?இப்பவே மூடினா ஏன்னா ப்ரோப்லேம் னு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X