பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபராக சுல்தான் தேர்வு

Added : ஆக 17, 2021
Share
Advertisement
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபராக, ஆளும் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி எம்.எல்.ஏ., சுல்தான் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபர் சர்தார் மசூத் கான் பதவிக்காலம் வரும் 24ல் முடிவடைகிறது. இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் சுல்தான் முகமதுவுக்கு 34 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட மியன்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபராக, ஆளும் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி எம்.எல்.ஏ., சுல்தான் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபர் சர்தார் மசூத் கான் பதவிக்காலம் வரும் 24ல் முடிவடைகிறது. இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் சுல்தான் முகமதுவுக்கு 34 ஓட்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட மியன் அப்துல் வஹீதுக்கு 16 ஓட்டுகளும் கிடைத்தன.இதையடுத்து, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், சுல்தான் முகமது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1996 - 2001 வரை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக பதவி வகித்துள்ள சுல்தான் முகமது, தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் பிராந்திய தலைவராகவும் உள்ளார். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு, இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்பை மூடி மறைக்க இத்தேர்தல் நடத்தப்படுவதாக இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.

''இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீரில் பாக்.,கிற்கு எந்த உரிமையும் இல்லை. ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து பாக்., வெளியேற வேண்டும்,'' என, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X