லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங் சிலையை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் லாகூர் கோட்டையில், 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை உள்ளது.இந்த சிலை ஏற்கனவே இருமுறை சேதப்படுத்தப்பட்டு பின் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சிலையை சமீபத்தில் ரிஸ்வான் என்பவர் சேதப்படுத்தி உள்ளார். சிலையை அவர் சேதப்படுத்தும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரிஸ்வானை கைது செய்தனர். இவர் பாக்., அரசால் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் - இ - லப்பைக் என்ற வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்.
இது குறித்து, பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஷாபாஸ் கில் கூறியதாவது:
லாகூரில் ரஞ்சித் சிங் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்டை நாடுகளில், பாக்.,கின் மதிப்பை குறைப்பதற்கான முயற்சியாகவே இதனை கருதுகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE