எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அரசு கலை கல்லுாரிகளில் 'அட்மிஷன்' நடக்குமா?

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தாமதமாகி உள்ளதால், மாணவர்களும், பெற்றோரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும், 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக கல்லுாரி கல்வித் துறை சார்பில், இந்த மாதம், 10ம் தேதி வரை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு
 அரசு கலை கல்லுாரிகள்,அட்மிஷன' நடக்குமா?

சென்னை :அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தாமதமாகி உள்ளதால், மாணவர்களும், பெற்றோரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும், 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக கல்லுாரி கல்வித் துறை சார்பில், இந்த மாதம், 10ம் தேதி வரை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது.
கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்த இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதையடுத்து, ஒவ்வொரு கல்லுாரியும் விண்ணப்பங்களை பரிசீலித்து, தங்களின் இணையதளம் வழியே, தரவரிசை பட்டியலை வெளியிடும். அதிலுள்ள வரிசைப்படி, மாணவர் சேர்க்கை நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால், 10ம் தேதி விண்ணப்ப பதிவு முடிந்து, ஒரு வாரம் தாண்டிய பின்னும், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கவில்லை.விண்ணப்ப பதிவு செய்த அனைவருக்கும், தரவரிசை பட்டியல் தயாரித்து, கல்லுாரி இணையதளங்களில் வெளியிடவில்லை.மேலும், கல்லுாரியில் இருந்து எந்த தகவலும் அனுப்பவில்லை என்றும், மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கல்லுாரிகளுக்கு சென்றால், மாணவர்கள் அனுமதிக்கப்படாத நிலை உள்ளது.இதுகுறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மவுனமாக உள்ளது. அதனால், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள் என்ன ஆகின; 'சீட்' கிடைக்குமா என, அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கல்லுாரி கல்வி இயக்குனரும், மற்ற அதிகாரிகளும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, மாணவர் சேர்க்கை பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-ஆக-202110:50:52 IST Report Abuse
duruvasar தேதி குடுக்கல இல்ல. அப்பறம் என்ன பிரச்சனை. நல்லாட்சிக்கு மாசு கற்பிக்காதீர்கள்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
18-ஆக-202106:50:17 IST Report Abuse
அசோக்ராஜ் ஏண் பொலம்புறீங்க? அடுத்த கொரோனா அலையில் உங்க எல்லாருக்கும் டிக்கிரி சர்ட்டிபிகேட்டு. போய் செல் போனை கவனிங்க. தெலுங்கு வால்க. திராவிசம் வெல்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X