முதல்வர் ஸ்டாலின், செப்., 16ல் டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தி.மு.க., சார்பில், செப்., 15ல், அண்ணாதுரை பிறந்தநாள், தி.மு.க., துவக்க நாள், ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழா என, முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை நடத்தி விட்டு, டில்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள, தி.மு.க., அலுவலகத் திறப்பு விழாவையும் சிறப்பாக நடத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
டில்லியில் நடக்கும் விழாவிற்கு, காங்., தலைவர் சோனியா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் டில்லி தலைவர்களை அழைக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.இந்த விழாவில், 'ரைசிங் சன்' என்ற ஆங்கில பத்திரிகையை மீண்டும் பொலிவுடன் வெளியிடவும், தி.மு.க., திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, செப்., 16ல் ஸ்டாலின் டில்லி செல்வார்; 17ம் தேதி விழா நடைபெறும்; அடுத்த நாள் சென்னை திரும்புவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE