அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: காங்கிரசாருக்கு அருகதை உண்டா?

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:நசீமுதீன் சித்திக், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழக காங்., தலைவர் அழகிரி, 'கருத்து சுதந்திரத்தை மத்திய அரசு பறிக்கிறது. இந்த சர்வாதிகாரத்தை முறியடிப்பதற்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள சக்திகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும்' என, ஓர் அறிக்கை மூலம் அங்கலாய்த்து
Congress, Indira Gandhi, KS Alagiri


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


நசீமுதீன் சித்திக், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழக காங்., தலைவர் அழகிரி, 'கருத்து சுதந்திரத்தை மத்திய அரசு பறிக்கிறது. இந்த சர்வாதிகாரத்தை முறியடிப்பதற்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள சக்திகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும்' என, ஓர் அறிக்கை மூலம் அங்கலாய்த்து இருக்கிறார்.


latest tamil news



'ஜனநாயகம்' என்ற வார்த்தையை, காங்கிரசார் பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது. அந்த வார்த்தையை பயன்படுத்த, அக்கட்சிக்கு அருகதை இருக்கிறதா என சிந்தித்து பார்க்க வேண்டும். இந்திரா பிரியதர்ஷினி என்றொரு காங்., தலைவி, நம் பிரதமராக இருந்தது நினைவில் இருக்கிறதா அழகிரி? கடந்த 1971ல் நடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.,யின் அலகாபாத் தொகுதியில் காங்., வேட்பாளராக இந்திரா போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளராக ராஜ் நாராயண் என்பவர் போட்டி இடுகிறார். தேர்தலில் இந்திரா வெற்றி பெற்று விடுகிறார். அந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நாராயண் வழக்கு தொடுக்கிறார்.

நான்கு ஆண்டுகள் நடந்த வழக்கில், தேர்தலில் முறைகேடு செய்து தான் இந்திரா வெற்றி பெற்று இருக்கிறார். எனவே அவரது தேர்தல் வெற்றி செல்லாது என, 1975 ஜூன் 12ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சின்கா தீர்ப்பளித்தார்.


latest tamil news



இந்த தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், நீதிமன்றத்தில் கூடியிருந்த இந்திராவின் மகன் சஞ்சயும், அவரது சகாக்களும் அராஜகத்தில் இறங்கினர். இன்று பார்லிமென்டில் நடப்பதை விட, கூடுதல் அதகளத்தை நீதிமன்றத்தில்- நடத்தி காட்டினார். தீர்ப்பு அளித்த நீதிபதி, உயிர் தப்ப ஓடி ஒளிய வேண்டியிருந்தது.

தீர்ப்பு வந்த அடுத்த 15வது நாளில், நாட்டில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தினார், காங்கிரசை சேர்ந்த இந்திரா. இந்தியாவின் கறுப்பு நாட்கள் அவை! இந்த உண்மை கதை, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு தெரியுமா? ஜனநாயகத்தை பற்றி பேச காங்கிரசாருக்கு கொஞ்சமாவது அருகதை உண்டா?

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-ஆக-202116:45:19 IST Report Abuse
sankaseshan பாமரர நீ சொல்லறதை முதலி ல்நீ follow பண்ணனும் அப்புறமா பிறருக்கு புத்திமதி சொல்லு
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
18-ஆக-202123:55:32 IST Report Abuse
vns ஜனநாயகத்தை பற்றி கவலை உள்ள அழகிரி அவருடைய KhanCross கட்சியில் ஜனநாயகம் உள்ளதா என்று கவலை கொள்ளட்டும். KhanCross கட்சியின் இப்போதைய நிலைமைக்கு காரணம் ஒரு குடும்ப தலைமை தான். முதலில் அழகிரி ஜனநாயகத்தை கட்சியில் கொண்டு வரட்டும். குடும்ப அங்கத்தினர் அல்லாதோர் கட்சி தலைமைக்கு வரட்டும். அப்புறம் அவர் நாட்டைப் பற்றி பேசலாம். மன்மோகன் பிரதமராக இருந்தபோது சோனியா தான் முடிவுகளை எடுத்தார். ராகுல் காந்தி, அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தான், மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தை பத்திரிகை நிருபர்கள் முன்னால் கிழித்தது சிலருக்காவது ஞாபகம் இருக்கலாம். அது ஜனநாயகமா? அல்லது அஜராகமா, அழகிரி பதில் கூறட்டும்.
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
18-ஆக-202123:46:00 IST Report Abuse
vns கருத்துக்கள் என்ற பெயரில் அபவாதங்கள், அபத்தங்கள், பொய்கள் பதிவு செய்யப்படுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X