தமிழ்நாடு

தரமற்ற கட்டடங்களில் கு.மா.வா., ; ஊழல்வாதிகளால் உயிருக்கு ஆபத்து

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புளியந்தோப்பு : சென்னை புளியந்தோப்பில், பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு, கடந்தாண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதை அடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.தரமில்லாத வகையில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பை, நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ
 தரமற்ற கட்டடங்களில் கு.மா.வா., ; ஊழல்வாதிகளால் உயிருக்கு ஆபத்து

புளியந்தோப்பு : சென்னை புளியந்தோப்பில், பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு, கடந்தாண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதை அடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தரமில்லாத வகையில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பை, நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ தகுதியானதாக அறிவித்து, அதை ஒப்படைத்த அதிகாரிகள், கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர்கள் என, 'மெகா' ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும், பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.


latest tamil newsவிபத்து அச்சம்


சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில், 2018ல் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு, 864 புதிய வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதில், 112.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக 864 வீடுகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டமாக 139.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,056 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து முடிந்தன. 2019ல் தயாரான 864 வீடுகள், பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதை அடுத்து, ஓராண்டிற்கு பின், 2020 பிப்., 5ம் தேதி 'டோக்கன் குலுக்கல்' முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அப்போது, பயனாளிகள் 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என, குடிசை மாற்று வாரியம் வலியுறுத்தியது. இந்த தொகையை செலுத்த முடியாத மக்கள் பலர், தற்காலிக கொட்டகையில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில், கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பலர், அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்றனர். இவர்களை தவிர, 200 பேர் வாரியத்தை எதிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியேறினர்.'புதிய வீடு; புதிய வாழ்க்கை' என்ற வாரியத்தின் விளம்பர வாசகத்தை நம்பி குடியேறிய அவர்களுக்கு, மிகப் பெரிய பேராபத்து காத்திருப்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.வீட்டின் சுவர், கூரை உள்ளிட்ட பல பகுதிகளில், சிமென்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன. விரல்களால் அழுத்தினால், சிமென்ட் பூச்சுகள் கையோடு வருவதால், கட்டடம் எப்போது விபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.


latest tamil newsமெகா ஊழல்


கதவு சட்டங்கள், ஜன்னல்களோரம் வெடிப்பு ஏற்பட்டு, எந்நேரத்திலும் விழும் அபாயகரமான நிலையில் உள்ளன. இதனால் அங்கு வசிக்கும் பலரும், தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வந்து உறங்குவதாக புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த, எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், நேற்று மாலை வாரிய குடியிருப்புகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, பெயர்ந்து விழுந்த உடைசல்களை, தற்காலிகமாக சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே, மேம்போக்காக மராமத்து பணிகளை மேற்கொள்வதை விடுத்து, கட்டடத்தின் மோசமான தரத்தால், அங்கிருப்போரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதே போல், குடியிருப்பு கட்டடங்களை கட்டுவதில், மெகா ஊழலில் ஈடுபட்டோரை கண்டறிந்து, அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.


latest tamil news
முழு கட்டடத்தையும் இடிக்க வேண்டும்


இது குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் 'டுவிட்டர்' பதிவு:புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பை தொட்டாலே, சிமென்ட் பூச்சுகள் உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் எழுதிய செலவு கணக்கு 15 லட்சம் ரூபாய். 1,000 ரூபாய்க்கு வாங்கும் எலக்ட்ரிக் ஷேவருக்கு கூட, ஓராண்டு உத்தரவாதம் உண்டு. குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரை உடனடியாக விசாரிக்க வேண்டும். மொத்த கட்டடத்தையும் இடித்து விட்டு, அதே ஒப்பந்த தாரரின் பணத்தில், புதிதாக குடியிருப்பை கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


குடிநீர் இணைப்பு துண்டிப்பு


இதற்கிடையே, குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதை வாரியம் நிறுத்தி உள்ளதாகவும் இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட அளவீட்டு தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. அதே போல், குடியிருப்புவாசிகள் கட்ட வேண்டிய பயனாளர் தொகையை தனியார் வங்கிகளில் கடன் பெற்றாவது உடனடியாக கட்ட வேண்டும் என, வாரிய அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும், குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-ஆக-202103:47:55 IST Report Abuse
NicoleThomson உடனே அப்போ கட்டிய திருடன் என்று இப்போ இருக்கும் திருடர்கள் கூறுவார்கள் பாருங்க
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
18-ஆக-202113:03:09 IST Report Abuse
R Ravikumar எல்லா ஊழல்களோடு இதுவும் சேர்ந்து கொள்ளும் . அதிகாரிகளை மட்டும் தண்டிக்க முடியாது . அவர்கள் கை காட்டும் அரசியல் வாதிகளை தண்டிப்பது இயலாத காரியம் ( செய்ய மாட்டார்கள் ) . இது நமது ஒட்டு மொத்த மக்களின் குறை .
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-202112:21:00 IST Report Abuse
 rajan வாங்கிய பணத்தை எல்லாருக்கும் 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நீதி மன்றத்தில் வழக்கு போடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X