காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் படித்துள்ள தலிபான்கள், காபூல் நகரிலுள்ள அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.

காபூல் நகரில் உள்ள அதிபர் மாளிகையை ஆக்கிரமித்த தலிபான்கள் மாளிகைக்குள் நுழைந்ததும் அங்குள்ள ஆடம்பரமான பொருட்களை ஆச்சரியத்துடன் காணும் காட்சிகளும், அதிபர் மாளிகைக்குள் தரையில் அமர்ந்து விருந்து சாப்பிடும் காட்சிகளும் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் நேற்று வைரலானது.

These guys conquered Afghanistan in two days
pic.twitter.com/qtuMJHpA13
— Matt Walsh (@MattWalshBlog) August 17, 2021

அதேபோல் காபூல் நகரில் உள்ள சிறுவர் பூங்காவிற்குள் புகுந்த தலிபான்கள், காணாததைக் கண்டது போல், குழந்தைகள் விளையாடும் பேட்டரி காரில் ஏறி ஆட்டம் பேட்டனர். மேலும், தீம் பார்க் ஒன்றில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குள் நுழைந்த தலிபான்கள், அங்குள்ள உபகரணங்களை பயன்படுத்த தெரியாமல் அவற்றை இழுத்தும் அவற்றின் மீது ஏறியும் ஆட்டம் போடும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE