சுனந்தா புஷ்கர் மரண வழக்கு; சசிதரூர் விடுவிப்பு

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் மரண வழக்கு விசாரணையிலிருந்து சசிதரூரை விடுவிப்பதாக டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக சசிதரூர் மீது வழக்குப்பதிவு
Sunanda Pushkar, Death Case, Shashi Tharoor, Discharged, Delhi Court, சுனந்தா புஷ்கர், மரண வழக்கு, சசி தரூர், விடுவிப்பு

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் மரண வழக்கு விசாரணையிலிருந்து சசிதரூரை விடுவிப்பதாக டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக சசிதரூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுனந்தா உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, விஷத்தின் காரணமாக சுனந்தா புஷ்கர் உயிரிழந்ததாக கூறியது. இதனையடுத்து, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கைக் கொலை வழக்காக மாற்றி டில்லி போலீஸ் விசாரணை நடத்திவந்தது.


latest tamil news


இதன்தொடர்ச்சியாக இந்த வழக்கில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டில்லி போலீஸ் தாக்கல் செய்தது. சசிதரூர் எம்.பி.,யாக உள்ளதால் இந்த வழக்கை அரசியல் தலைவர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்ததை அடுத்து, இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஆக.,18) வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிப்பத்தாக உத்தரவிட்டார்.

இதற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறிய சசிதரூர், இந்த விவகாரம் கடந்த ஏழரை ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது அதிலிருந்து தனக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-202108:57:43 IST Report Abuse
Tgsoundarrajan Balu நீதி மன்றம் விடுதலை செய்யலாம் மனசாட்சி விடுதலை செய்யாது
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-ஆக-202106:03:35 IST Report Abuse
Matt P நீதிக்கு சோதனை
Rate this:
Cancel
Sri - Ghisin,கோஸ்டாரிகா
18-ஆக-202122:52:11 IST Report Abuse
Sri கலைஞரின் வாக்கியம் ..வாங்கப்பட்ட தீர்ப்பு ..வழங்கப்பட்ட தீர்ப்பு ..மெஜாரிட்டி ...தீர்ப்பு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவை..முதல் ரகம்...யார் கொன்றது சுநந்தாவை.. தற்கொலை இல்லை அப்படியென்றால் ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X