காபூல்: தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளதால், ஆப்கனை விட்டு பலரும் வெளியேறி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிந்து கோயிலின் அர்ச்சகர், தனது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக சேவையாற்றியுள்ளனர். அதை கைவிடப்போவதில்லை. தலிபான்கள் கொன்றாலும் அதனை சேவையாகவே கருதுவேன் என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் அச்சமடைந்த பலரும் அங்கிருந்து வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ஆனால், காபூலில் உள்ள ரத்தன்நாத் கோயில் அர்ச்சகராக உள்ள ராஜேஷ் குமார் ஆப்கனை விட்டு வெளியேற போவதில்லை எனக்கூறியுள்ளார்.

''தனது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக சேவையாற்றிய கோயிலை விட்டு நான் வெளியேற மாட்டேன். நான் கோயிலை கைவிட மாட்டேன். தலிபான்கள் என்னை கொன்றாலும், அதை சேவையாகவே கருதுவேன். தங்களுடன் வரும்படி ஏராளமான பக்தர்கள் மற்றும் ஹிந்துக்கள் என்னை கேட்டனர். ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை'' என ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள், ராஜேஷ்குமாரை பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE