திருப்பூர் : திருப்பூரில், தியாகி சுந்தராம்பாள் குடும்பத்தினரை சந்தித்து மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்; மாணவர்களிடம் மனுக்களை பெற்றார்.
மத்திய அரசு திட்டங்களை மக்கள் அறிய செய்யும் நோக்கில், 'மக்கள் ஆசி யாத்திரை'யை, நேற்று, திருப்பூர், தாராபுரம், காங்கயத்தில், மத்திய இணை அமைச்சர் முருகன் மேற்கொண்டார்.திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து, முருகன், மரியாதை செலுத்தினார்; தியாகி சுந்தராம்பாள் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், கல்லுாரியில் படிக்கும் மற்றும் படிப்பை முடித்த பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களிடம் கோரிக்கை மனுவை, அமைச்சர் பெற்றார். அதில், பலரும் வேலை வாய்ப்பு கோரி மனு அளித்தனர்.தேசிய அளவில் குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி ஹரிணி, பீச் வாலிபால் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவன் தரணிஷ், ஜூடோவில் தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவன் மணிவேலன் ஆகியோரை சந்தித்து, பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE