தலிபான்களை சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பீடு: சமாஜ்வாதி எம்.பி., மீது தேச துரோக வழக்கு

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
லக்னோ: தலிபான் பயங்கரவாதிகளை, இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் ஒப்பிட்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சமாஜ்வாதி எம்.பி., சபிக்குர் ரஹ்மான் பார்க் மீது உ.பி., போலீசார் தேச துரோக வழக்கை பதிவு செய்துள்ளனர்.ஆப்கனில் தலிபான் அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றியது தொடர்பாக, உ.பி.,யின் சாம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யான சபிக்குர் ரஹ்மான் பார்க்

லக்னோ: தலிபான் பயங்கரவாதிகளை, இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் ஒப்பிட்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சமாஜ்வாதி எம்.பி., சபிக்குர் ரஹ்மான் பார்க் மீது உ.பி., போலீசார் தேச துரோக வழக்கை பதிவு செய்துள்ளனர்.



latest tamil news


ஆப்கனில் தலிபான் அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றியது தொடர்பாக, உ.பி.,யின் சாம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யான சபிக்குர் ரஹ்மான் பார்க் கூறும்போது,பிரிட்டிஷார், இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஒட்டு மொத்த நாட்டு மக்களும் சுதந்திரத்திற்காக போராடினர். தற்போது தலிபான்கள் அவர்கள் நாட்டை சுதந்திரம் பெற வைத்திருக்கின்றனர். அவர்களே ஆள வேண்டும் என கருதுகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா போன்ற வலிமையான எந்த நாடும் தங்கள் நாட்டில் குடியேறாமல் தலிபான்கள் தடுத்திருக்கின்றனர். இப்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே ஆள விரும்புகின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும்? எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக சம்பால் மாவட்ட போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சபிக்குர் ரஹ்மான் பார்க் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news


இது குறித்து மாவட்ட எஸ்.பி., சர்கேஷ் மிஸ்ரா கூறுகையில், தலிபான்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சபிக்குர் ரஹ்மான் பார்க் மற்றும் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலிபான்களை, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர். இதனால், எம்.பி., கருத்து தேச துரோகமாக கருதப்படும் எனக்கூறினார்.


latest tamil news


இது தொடர்பாக சபிக்குர் ரஹ்மான் பார்க் கூறுகையில், தலிபான்களை, சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேச வில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. நான் இந்திய குடிமகன். ஆப்கன் குடிமகன் அல்ல. இந்திய அரசின் கொள்கையை ஆதரிப்பவன் என தெரவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
19-ஆக-202110:03:20 IST Report Abuse
duruvasar அட போங்கப்பா . ஈ வே ராமசாமி நாயக்கன் ஒரு பெரிய சுதந்திர போராட்ட வீரர் என்பததே இப்போதான் ஸ்டாலின் ஐயா சொன்னதுக்கு அப்பறம் எங்களுக்கு தெரிந்தது. லியோனிக்கு பாயிண்ட் எடுத்து கொத்துட்டாருதில்ல. . நாங்க இந்தனை நாளாய் ஈவேரா வெறும் வைக்கம் வீரர் மட்டும்தான் என்று நினைத்திருந்தோம்.
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
19-ஆக-202109:49:58 IST Report Abuse
Gopal இந்த மாதிரி உள்ள பல கழுதைகளை ஆப்கானிதனுக்கு அனுப்பி விடலாமே. நம் நாட்டுக்கும் நல்லது.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
19-ஆக-202106:57:38 IST Report Abuse
அம்பி ஐயர் சரி... அப்புறம் எதுக்கு அங்க இருக்குற முஸ்லீம்கள் எல்லாம் ஊரை விட்டு ஓடுறாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X