ஜலாலாபாத்தில் போராட்டம்: தலிபான்கள் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
காபூல்: ஆப்கனின் ஜலாலாபாத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள், ஆட்சி அமைப்பது தொடர்பாக முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்நிலையில், ஜலாலாபாத் நகரில் சாலைகளில்
ஆப்கன், தலிபான்கள்,  ஜலாலாபாத்,

காபூல்: ஆப்கனின் ஜலாலாபாத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள், ஆட்சி அமைப்பது தொடர்பாக முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ஜலாலாபாத் நகரில் சாலைகளில் பல இடங்களில் ஆப்கன் தேசிய கொடியுடன் பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த தலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அங்கு வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களையும் கடுமையாக தாக்கினர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் தலிபான்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


சிலை தகர்ப்பு

latest tamil news
ஹசாராத் இன மக்கள், ஆப்கன் மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தின் தலைவராக இருந்த அப்துல் அலி மசாரியை கடந்த 1995ம் ஆண்டில் தலிபான்கள் தூக்கிலிட்டனர். இதனால், அவரின் மிகப்பெரிய சிலையை பாமியான் நகரில் மக்கள் நிறுவினர். இதனால், அந்த மக்கள் மீது வெறுப்படைந்த தலிபான்கள் தொடர்ந்து துன்புறுத்தினர். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஹசாரா இனத்தலைவரின் சிலையை தகர்த்தனர்.

மேலும், இந்த இன மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில், பெண்கள் முக்கிய பதவிகளில் உள்ளனர். அதில் சாகர்ஹிந்த் மாவட்ட கவர்னராக இருந்த சலீமா மசாரியை தலிபான்கள் கடத்தியுள்ளனர். இதனை, அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jay - SFO,யூ.எஸ்.ஏ
18-ஆக-202122:04:53 IST Report Abuse
Jay இது இஸ்லாம் கிடையாது. ஆனால் இஸ்லாத்தில் இவைகள் எல்லாம் உருவாகும். என்ன இஸ்லாமிய நண்பர்களே, உங்கள் மத ஆதரவு இதுதானே. கேட்டால், ஹிந்துவில் மத வெறியர்கள் இல்லையா, கிருஸ்துவர்கள் மத வெறியர்கள் இல்லையா என்று சப்பை கட்டு கட்டவேண்டியது. உண்மையில், மற்ற எல்லா மதங்களில் உள்ள ஆபத்துகளை விட இஸ்லாத்தில் உள்ள ஆபத்து அதிகம். குர்ஆனில் ஆன்மீக விஷயங்கள் ஒன்று கூட கிடையாது. யாருடனும் விவாதிக்க தயார். ஆனால் துப்பாக்கி முனையில் மதம் பேசுபவர்களிடம் என்ன பேச முடியும். தாலிபான்கள் வந்தவுடன் அனைவரும் சொல்லும் வார்த்தை "அங்குள்ள பெண்கள் பாவம்". ஆனால் அது இஸ்லாம் இல்லை. பின் தாலிபான்கள் என்ன ஹிந்துக்களா?
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-202110:45:17 IST Report Abuse
aashikHello. Stop talking bullshit about islam. what u know about islam ?. Islam never supports terrorist. Quran is the only way for peace and happiness . If some people from one religion does the mistake , then it doesn't mean the whole religion is wrong . Islam teach us the correct and honest way for the human to live in the world. Once again - ISLAM NEVER SUPPORT TERROR ACTIVITIES....
Rate this:
Jay - SFO,யூ.எஸ்.ஏ
19-ஆக-202122:59:48 IST Report Abuse
Jaywherever you are (majority), there terrorism are prominent. Can you argue with me your knowledge about Quran. Can you speak about Atma from Quran. That is another useless book. It has no knowledge about the world, spiritual world, God's form, the relationship with God, Activities with God. Just believe me or you will go to hell. is this ure?...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-ஆக-202121:36:24 IST Report Abuse
sankaseshan The internal fight between various groups will cause headaches to taliban. Without cooperation of all running the government will be difficult .
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-ஆக-202121:25:42 IST Report Abuse
elakkumanan நீல கலர் சாயம் பூசிய நரி.................ஊளை இடுவதை மாற்றவா முடியும்? திமுக நேர்மையான, ஒழுக்கமான , தேசிய பார்வையுடன் ஆட்சி செய்யும்.............நம்புங்கள்.....ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்கிறேன்..நம்புங்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X