மீண்டும் வறட்டி பயன்படுத்தும் நிலை: காஸ் விலையுயர்வு குறித்து காங்கிரஸ்

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: சமையல் எரிவாயு விலை உயர்வு, பெண்களுக்கு எதிரான மத்திய அரசு கொள்கையின் பிரதிபலிப்பு என்றும், அவர்களை மீண்டும் விறகு, வறட்டி பயன்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளியிருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.சர்வதேச சந்தையில் எரிபொருளின் சராசரி விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்
வறட்டி, காஸ் விலை, காங்கிரஸ்

புதுடில்லி: சமையல் எரிவாயு விலை உயர்வு, பெண்களுக்கு எதிரான மத்திய அரசு கொள்கையின் பிரதிபலிப்பு என்றும், அவர்களை மீண்டும் விறகு, வறட்டி பயன்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளியிருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் சராசரி விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி தொடர்ந்து 2-வது மாதமாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. செவ்வாயன்று ரூ.25 உயர்த்தப்பட்டு தமிழகத்தில் சிலிண்டர் ரூ.875.50-க்கு விற்கப்படுகிறது. 2021 ஜனவரி தொடங்கி ஆக., 17 வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.165 அதிகரித்துள்ளனர்.


latest tamil news




இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கூறியதாவது: சிலிண்டர் விலையை உயர்த்தும் முடிவு அரசின் பெண்களுக்கு எதிரான கொள்கையை காட்டுகிறது. அதிக விலை காரணமாக பெண்களை மீண்டும் விறகு மற்றும் வறட்டிக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது பெண்களின் உடல்நலத்துக்கு கெடுதல் விளைவிப்பதாகும். காஸ் இறக்குமதிக்கு ரூ.600-க்கு மேல் ஆகாது. பிறகு ஏன் மக்கள் அதிகத் தொகை செலுத்த வேண்டும். பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் காஸ் இணைப்புகளை கொடுத்தீர்கள். அவர்களில் எத்தனை பேரால் ரூ.860 செலுத்தி சிலிண்டர் வாங்க முடியும்? விலையை குறைக்க அரசு ஏன் எதுவும் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-202114:33:21 IST Report Abuse
ஆரூர் ரங் பல மாநிலங்களில் குழாய் மூலம் குறைந்த விலையில் தடங்கல் இல்லாமல் சமையல் வாயு வீடுகளுக்கு நேரடியாக👌 கொடுக்கப்படுகிறது. சிலிண்டர் புக்கிங் அவசியமில்லை. பல ஆண்டுகளாக அதே நிறுவனங்கள் இங்கும் அதே போல நிறுவ அனுமதி ஒத்துழைப்பு கேட்டும் பலனில்லை. 90 களில் ஆண்ட காங்கிரசு தனது கூட்டாளிகளுக்கு கேஸ் சிலிண்டர் ஏஜென்சி வாரி வழங்கினர். அவர்கள் சுயநலத்திற்காக அரசியல் செல்வாக்கு மூலம் இங்கு நல்லது நடக்க விடாமல் அடிக்கின்றனர்
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
19-ஆக-202112:01:22 IST Report Abuse
Ramalingam Shanmugam மாத கணக்கில் காஸ் கிடைக்காம இருந்தோம் மறந்து போச்சா ப்ளாக்கில் வாங்கினோம் மறந்து போச்சா
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-ஆக-202111:48:55 IST Report Abuse
Dhurvesh சொல்லிடாதீங்கள் அப்புறம் அந்த வறட்டி க்கும் GST போடுவார் மோடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X