சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்புதிய தொழில்நுட்பம்கடல்நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கொரியாவின் சிவில் இன்ஜினியரிங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 'எதிர்திசை சவ்வூடு பரவல்' முறை மூலம் கடல்நீரில் இருந்து உப்பு, மாசுக்களை நீக்கி குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள மெல்லிய சவ்வுகள் 50 மணி

அறிவியல் ஆயிரம்

புதிய தொழில்நுட்பம்

கடல்நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கொரியாவின் சிவில் இன்ஜினியரிங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 'எதிர்திசை சவ்வூடு பரவல்' முறை மூலம் கடல்நீரில் இருந்து உப்பு, மாசுக்களை நீக்கி குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள மெல்லிய சவ்வுகள் 50 மணி நேரத்துக்கு பின் மாற்றப்பட வேண்டும். ஆனால் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள 'காக்சியல் எலெக்ட்ரோஸ்பன் நானோ பைபர்' தொழில்நுட்பம் கடல்நீரில் உள்ள உப்பை 99.9 சதவீதம் நீக்குகிறது. இது ஒரு மாதம் வரை வருகிறது.

தகவல் சுரங்கம்

உலக புகைப்பட தினம்


புகைப்படம் எடுப்பது ஒரு 'கலை'. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். லுாகிஸ் டாகுரே 19ம் நுாற்றாண்டில் 'டாகுரியோடைப்' எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆக., 19ல் பிரான்ஸ் அரசு, 'டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது.
இதை எடுத்துரைக்கும் வகையில் ஆக., 19ல் உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X