சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பிரியாணி கிடைக்குமா?

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பிரியாணி கிடைக்குமா?கோவைக்கு வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை, 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., தொண்டர்கள், மேளம் அடித்தும், கோஷம் எழுப்பியும் வரவேற்றனர்.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், 'அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில், தி.மு.க., அரசு, என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி' என்றார்.அங்கிருந்த
பக்க வாத்தியம்


பிரியாணி கிடைக்குமா?




கோவைக்கு வந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை, 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., தொண்டர்கள், மேளம் அடித்தும், கோஷம் எழுப்பியும் வரவேற்றனர்.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், 'அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில், தி.மு.க., அரசு, என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி' என்றார்.அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'அதெல்லாம் கிடக்கட்டும்... அடுத்தமுறை அமைச்சர் வீட்டில் 'ரெய்டு' நடந்தால், தொண்டர்களுக்கு பிரியாணி போடுவாங்களா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
19-ஆக-202120:51:44 IST Report Abuse
Ramarao Ramanaidu டில்லியில் விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சமைத்துப் போட்டார்கள். சாராயம் கொடுத்தார்கள். கால் மசாஜ் செய்தார்கள். படுக்கப் பாய் கொடுத்தார்கள். இன்னும் என்னென்னவோ கொடுத்தார்கள். யூடிபில் பாருங்கள். இரா. இராமராவ், கோலாலம்பூர், மலேசியா.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஆக-202106:03:36 IST Report Abuse
D.Ambujavalli பிரியாணி என்ன, நல்ல திருமண மண்டபம் புக் செய்து, இலைபோட்டு, பூரி ஜெகந்நாதனுக்கு செய்வது போல் ஐம்பத்தாறுவித கறிவகைகள், பலகாரங்களுடன் விருந்தே கிடைக்கும். அவரிடம் உள்ள பணத்துக்கு, ஆயிரம் பேர் எல்லாம் அவமான எண்ணிக்கை. ஒரு லட்சம் பேராவது உண்டு, 'மீண்டும் மீண்டும் இந்த மாதிரி விருந்தளிக்க வேண்டும் என்று வாழ்த்த வேண்டாமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X